தலித் மக்களின் தலைவனாக காட்டிக் கொள்ளும் சிலர் ஆட்சி அதிகார வர்க்கத்தின் அடிவருடிகளாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் முகமூடி உமாசங்கர் ஐ.ஏ.எஸ் மூலம் தோலுரிக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்த அவர் அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தி.மு.க அரசை நடுங்க வைக்கும் சில விஷயங்களை சொல்லிவிட்டு போயிருக்கிறார். இது பற்றி தமிழக அரசியல் கட்டுர வெளியிட்டுள்ளது.
'சுடுகாட்டுக் கூரை அமைத்ததில் முறைகேடு தென்னிந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் நடந்த தவறுகள்,கிரானைட் குவாரி குத்தகை விடப்பட்டதில் நடந்த குழப்பங்கள்,எல்காட் அரசு கேபிள் டிவி நிர்வாகம் தொடர்பான தவறுகள் என ஏற்கனவே தான் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் நடந்த ஊழல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
இப்படி இவர் முறைகேடுகளை வெளிச்சம் போடும் விஷயத்தில் ஆடசி மேலிடத்தில் இருப்பவர்களோடு மோதல் ஏற்பட சாதி பிரச்சனை ஒன்றை கையில் எடுத்து சமீபத்தில் இவரை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு.
இவருக்கு ஆதரவாக தலித் அமைப்புகள் களத்தில் குதித்து போராட்டம் நடத்தஆரம்பிக்க சட்டென பின்வாங்கியது அரசு.
அவருக்கு பிறப்பிக்கப்பட்ட சஸ்பென்ட் உத்தரவை திரும்ப பெற்றது. டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பிறப்பிக்கப்பட்ட சஸ்பென்ட் உத்தரவை திரும்ப பெற்றது. டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்த உமாசங்கர் அங்கு பேசியதில், அரசாங்கம் தனக்கு இழைத்த கொடுமைகளை விவரித்து பேசியிருக்கிறார்.
உமாசஙகரின் பேச்சின் சாரம்சம்:
" நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மையான நிர்வாகம் வேண்டும். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்ததும் அமெரிக்காவில் இருந்து எனக்கு பத்து இமெயில் கடிதங்கள் வந்தன. மெயில் அனுப்பியவர்களில் ஒருவர் மட்டும் தான் தாழ்த்தப்பட்டவர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சாதிய கண்ணோட்டத்துடன் பார்க்க தேவையில்லை என்பதற்காகத்தான். ஊழல் அற்ற நேர்மையான ஒரு அதிகாரியை சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது.
மாறன் சகோதரர்களுக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இருந்த பிரச்சனைகள் விலகி இரண்டு தரப்பும் ஒன்று சேர்ந்தது. அதன்பிறகு தான் சுமஙகலி கேபிள் டிவியால் அரசு கேபிள் நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். அதில் சுமங்கலி கேபிள் டிவி அரசுடையமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தேன்.
சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் குற்ற செயல்களுக்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உடந்தையாக இருக்கும் விஷயத்தையும் அரசுக்கு சுட்டிக்காட்டி இருந்தேன். உடனே, பெரியவர் (கலைஞர்) என்னை அழைத்தார். 'உனக்கு என்னய்யா வேணும்? கேட்டு வாங்கிக்க! தேவையில்லாம பிரச்சனை பண்ணதேன்' னு சொன்னார். 'எனக்கு எதுவும் வேண்டாம். என் கடமையை என்னை செய்ய விட்டால் போதும்'னு சொல்லிட்டு திரும்பிட்டேன்.
விடுவார்களா மாறன் சகோதர்கள்?அவர்கள் பத்திரிக்கை மூலமாக என்னை தூற்ற ஆரம்பித்தார்கள். எனக்கு நான்கு கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக செய்தி போட்டார்கள். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். ' குறிப்பிட்ட அநத சொத்துக்கான பத்திரம் தொலைந்து போய்விட்டது. செய்தி போட்டவர்கள்,பத்திரத்தை கொடுத்து விட்டு ,99 சதவிகித சொத்தை எடுத்து செல்லலாம்' என்று இன்டர் நெட் மூலமாக சவாலாகவும் கிண்டலாகவும் பதிலளித்தேன்.
கலைஞரின் துணைவியார் ராசாத்திஅம்மாள் மீனவர்களுக்கு வயர்லெஸ் டெண்டர்ஐ தனக்கு தெரிந்தவருக்கு கொடுக்க சொன்னார். மறுத்து விட்டேன்.
எல்காட் நிறுவன தலைவர் மற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் ஈ.டி.எல் என்ற 700 கோடி மதிப்புள்ள நிறுவனம் சூறையாடப்பட்டது. இது பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பினேன்.
அதிகார மையத்தின் உச்சத்தில் உள்ள மாறன் சகோதர்களையும் கலைஞர்,அழகிரி இவர்களை எல்லாம் எதிர்த்து பூணைக்கு மணிட்டியிருக்கிறோம். இதனால் என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் இருக்கிறீர்கள். பத்திரிகைகள் இருக்கிறது. அது போதும். யாரையும் எதிர்கொள்வேன். இனியும் என் வேகத்தை குறைக்க மாட்டேன்.
சில தலித் தலைவர்கள் என் விசயத்தில் பதுங்கிஒதுங்குவது ஏன்?
பாவம்..அவர்கள் அரசியல் வாதிகளை அண்டி பிழைக்க வேண்டியது இருக்கிறது.
இவர்கள் தான் தலித் மக்கள் உரிமைக்கு போராடுகிறார்கள்.
தமிழக அரசு என் மீது வழக்கு போடா திட்டமிட்டிருப்பதாக் தகவல் வருகிறது.
இதற்கெல்லாம் பயப்படுகிரவன் அல்ல உமாசங்கர்.
இப்படி ஏராளமான விஷயங்களை பேசியிருக்கிறார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
பெரிய பெரிய ஆட்டுகிடை மீசை எல்லாம் வைத்துக்கொண்டு அடிவருடிகளாக இருக்கும் "வெத்து மீசை" டம்மிபீஸ் ஆசாமிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு துணிச்சலான அதிகாரி.
கைகொடுப்போம் உமாசங்கருக்கு...
பெரிய பெரிய ஆட்டுகிடை மீசை எல்லாம் வைத்துக்கொண்டு அடிவருடிகளாக இருக்கும் "வெத்து மீசை" டம்மிபீஸ் ஆசாமிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு துணிச்சலான அதிகாரி.
கைகொடுப்போம் உமாசங்கருக்கு...
நீதி
அதிகாரம் : வெருவந்தசெய்யாமை
குறள் : 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
பொருள்: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

2 கருத்துரைகள்:
உமா சங்கரின் பேச்சை முழுவதும் நீங்கள் பதிவு செய்யவில்லையே அதில் தான் வழிபாடும் முறையை பற்றி தெளிவாக பேசியுள்ளாரே தைரியமாக தான் ஒரு கிறிஸ்தவன் என்று ஏன் சொல்லவில்லை மறைக்க ஒன்றும் அது கள்ளகாதல் இல்லையே
ஒரு தனிநபரின் மதம்பற்றி நமக்கு கேள்விகள் வேண்டாம்.அதை அவர் சொல்லி அல்லது சொல்லாமல் எண்ண ஆகபோகிறது?
மக்கள் தொடர்பான அரசு ஊழல் செய்ய முயலும் பொது அதை உமாசங்கர் தடுக்கிறார்.இது மட்டும் தான் கருப்பொருள் நமக்கு.
Post a Comment