Pages

Friday, September 3, 2010

பாபாஜிக்கு ரஜினி சீடர் ஆக முடியுமா? நீங்களே முடிவு சொல்லுங்கள்.



ரஜினிஅதிரடி முடிவு-அதிர்ச்சியில் குடும்பம்
தமிழக அரசியல் இதழில் வந்த செய்த
" ரஜினியின் கடைசி படமாக எந்திரன் இருக்குமோ என்று ஐயம் வருகிறது. இந்தப்படத்துக்கு மட்டும் மூவாயிரம் பிரிண்டுகள் எடுக்கப்படுகிறதாம். ரிலீஸ் அன்று ரஜினி சென்னையில் இருப்பாராம். சில தினங்கள் அமெரிக்கா செல்வாராம். அங்கிருந்து திரும்பியதும் இமயமலைக்கு சென்று விடுவாராம். அங்கேயே ஒரு இடத்தை வாங்கி எளிமையான வீட்டையும் கட்டிவிட்டதாக தகவல்.அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார் என்று சொல்கிறார்கள்.

"என்ன காரணம்"?
"அதெல்லாம் தெரியவில்லை. மகள் திருமணம் செப்டம்பர் 3 ம் தேதி. அது ஒன்று தான் ரஜினி முன்னின்று நடத்த வேண்டியது. அது முடிந்ததும் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள். மேலும் முதல் மகளுக்கு என்னென்ன சொத்துக்கள்,மனைவிக்கு இது, இரண்டாவது மகளுக்கு இது என்று பிரித்து விட்டாராம்.
சென்னைக்கு வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவாராம். ரஜினியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-------இது தான் அந்த செய்தி

அதாவது ரஜினி பாபாஜி பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். பாபா தனக்கு காட்சி தந்து தன்னை சீடராக்கி கொள்வார் என்பது ரஜினியின் நம்பிக்கையாக இருக்கலாம். அது நடக்குமா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

லெளகீக வாழ்க்கையில் பற்றுக் கொள்ளும் மனிதர்கள் யாரும் எந்த மகானுக்கும் சீடராக முடியாது என்பது இயற்கையின் நியதி.அதாவது ஆசையை துறந்த மனிதர்கள் தான் இந்த உலகத்தில் கண்ணுக்குள் புலப்படாமல் வாழ்வதாக கூறப்படும் மகான்களுக்கு சீடராக வரமுடியும்.

 

நம்ம ரஜினி....அய்யகோ..சென்னையில் பல கோடி மதிப்பில் சொத்து, கர்நாடாகவிலும் ஐதராபாத்திலும் பண்ணைவீடு தொழிற்சாலைகள் என்று மகாகோடீசுவரர்.

தெளிவாக எப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும்? அந்த சம்பாதியத்தை எப்படியெல்லாம் மனைவி மகள்களுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்கள் செழிப்பாக வளமாக வாழ வேண்டும் என்றெல்லாம் மிகத்துல்லியமாக திட்டம் போட்டு கொடுத்து விட்டு இவர் இமயமலைக்கு செல்வாராம்.

இவரை மகாஅவதார் பாபாவும், அவரது எந்த சுயநலமும் இல்லா சீடர்களும் "உங்களுக்காக தான் ரஜினி காத்திட்டிருந்தோம்" என்று வரவேற்பார்களாம். என்ன கொடுமை இது?

மனது முழுவதும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றியும், அவர்கள் எந்த துன்பமும் படாமல் வாழவேண்டும் என்பதற்காக சொத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு செல்லும் இவரால் இமயமலைக்கு போய் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா? தவம் செய்ய உட்கார்ந்தவுடன் இவரது எண்ணமெல்லாம் எங்கிருக்கும்?

"ஐயோ சொத்தை பிரித்துக் கொடுத்து வந்தோமே..இந்த சவுந்தர்யா ஏதாவது புதுக்கம்பெனி தொடங்குகிறோம் என்ற பெயரில் எதையாவது தொடங்கி கடனை வைத்து விடப்போகிறாளோ? கடன் காரர்கள் வந்து மொய்த்து கோர்ட், கேஸ் என்றாகி விட்டால் என்னவாகும்" என்றல்லவா மனம் நினைக்கும். எப்படி தவம் செய்ய முடியும்?

பாபா யாரை தனக்கு சீடராக விரும்புகிறார். இந்த உலக இன்பங்களை துறந்தவனையும்,லெளகீக வாழ்க்கையில் பற்று வைக்காதவனையும் தான். ஆனால் ரஜினிக்கு தனது சொத்தின் மேல் அளவு கடந்த பிரியம். அதை விட தனது வாரிசுகள் மேல் தீராத பிரியம். இப்படி பட்டவரால் எப்படி பாபாக்க சீடராக முடியும்.

யாரால் பாபாஜிக்கு சிறந்த சீடராக முடியும்? இதோ ஒரு குட்டிக்கதை இங்கே பார்வைக்கு!!!

இந்த கதையை படித்து விட்டு ரஜினிக்கு பாபா சொல்லப் போவது என்ன தெரியுமா?

"டேரா டண்டா உடாவே" இது பாபாஜி தனது சீடர்களுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உரையாடி விட்டு கிளம்பும் போது சொல்லும் வார்த்தை.அதாவது" நாம் கிளம்பலாம்" என்று பொருள். ஆனால் அந்த கூட்டத்தில் ரஜினி சேர்க்கப்பட மாட்டார்.

நித்யானந்தா ஒரு புத்தகம் படித்து தான் இவ்ளோ பக்தர்களை ஏமாற்ற முடிந்ததாக சொல்கிறார்கள்.அது பாபாஜியின் சீடரான யோகானந்த பரமகம்சர் எழுதியது. ஒரு யோகியின் சுய சரிதம் என்ற அந்த நூலில் இருந்து ஒரு குட்டி கதை....ரஜினிக்காக!!!



தலைவா.....எந்த குகைக்கு நீங்க போனாலும் உங்களுக்கு புண்ணியம் இல்லை.போஸ்லாம் வேணாம்
ரு சமயம் பாபாஜி நீடித்துயர்ந்த மலையில் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய புனிதமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வளவு உயரமான மலையை ஒரு மனிதன் மிகவும் சிரமத்துக்கு இடையே கடந்து அடைந்து விட்டான். அந்த மனிதன் ஒரு பாறையின் விளிம்பில் வந்து நின்றான்.

'ஐயா தாங்கள் தான் பாபாஜியாக இருக்க வேண்டும்'. அந்த மனிதனின் முகம் விண்டுரைைக்க முடியாத அளவு ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக்கணக்கில் இடைவிடாமல் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். தயை செய்து என்னை தங்கள் சீடனாக்கி கொள்ள மன்றாடுகிறேன்."மகாகுரு பாபாஜீ பதில் எதுவும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே உள்ள பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவை சுட்டிக்காட்டினான். 'நீங்கள் என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டுதலை நான் பெறாவிடில் இனி வாழ்நது பயனில்லை.'
" அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் உன்னை நான் ஏற்றுக் கொள்ள முடியாது" பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.
"அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத்தான பாறையை தாண்டி மலையிலிருந்து குதிதூது விட்டான். அதிர்ச்சியுற்ற பாபாஜி தனது சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலை உடனே கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார்.
சீடர்களும் உருக்குலைந்து போன அந்த மனிதனின் உடலைக் கொண்டு வந்து பாபாஜயின் முன் கிடத்தினார்கள். குருதேவர் பாபாஜி தனது கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார்.ஆ!!அவன் தன் கண்களை திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.
" நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்" உயிர்க்கப்பிட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார்."நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய்.மரணம் உனனை மறுபடியும் தீண்டாது.

அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்" பிறகு அவர் வழக்கமாக குறிப்பிடும் வார்த்தைகளை கூறினார். 'டேரா டண்டா உடாவோ' அக்குழு முழுவதும் அம்மலையிருந்து மறைந்து விட்டது.
கதை புரிந்ததா திரு ரஜினிகாந்த் ஆகிய சிவாஜிராவ் அவர்களே!
ஆக.......
உங்களால் பாபாஜிக்கு சீடராகவே முடியாது

காரணம் 1.நீங்கள் லெளகீக குடும்ப வாழ்க்ைக்கு அடிமையான ஒரு மனிதர்.பகட்டுக்கும் ஆடம்பரத்துக்கும் அடிமை. உங்களை போன்றவர்களால் பாபாஜியை காணவே இந்த பிறவியிலும் எந்த பிறவியிலும் முடியாது.

காரணம் 2. ஒரு சகமனிதனை ஏமாற்றினலே அவனை நரகத்தில் எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பார்களாம்.நீங்கள் பல கோடி இளைஞர்களை முட்டாள்களாக மாற்றி அறியாமையில் உழண்டு உங்கள் பின்னால் வந்த அவர்களுக்கு எந்த வாய்சும் கொடுக்கவில்லை. வாய்ப்பும் கொடுக்கவில்லை. ஆக உங்களுக்கு எண்ணெய் கொப்பரையா?குளமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
காரணம்......நீஙகள் பாபாஜி குகைக்கு போனதை கூட ஒரு தொலைக்காட்சி உங்கள் கு....பின்னாலேயே வந்து ஒளிபரப்பி தாராளமாக காசு பார்த்ததுடன் உங்களுக்கும் பெரிய ஞானி பட்டத்தை சூட்ட முனைந்தது.

இந்த "டிகால்டி" வேலைகள் பார்க்கும் நபர்களை எல்லாம் பாபாஜி சீடனாகவே ஏற்றுக் கொள்ளவே மாட்டார். பாறையிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குதித்தானே பாதாளத்தில் அவனை போன்றவர்கள் தான் பாபாஜிக்கு பிடித்தமானவர்கள்.ஆக..
ரஜினி அவர்களே...நீஙகள் எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டு இமயமலைக்கு போனாலும் உங்களால் பாபாஜியையோ அவரின் கால்கோடி சீடரைக்கூடி காணமுடியாது.உணரவும் முடியாது என்பதை விளக்கவே இந்த கதை.

பாபாஜி குழுவில் உங்களுக்கு இடம் இல்லை.
நீங்கள் இனி இமய மலைக்குக் எல்லாம் போய் புண்ணியம் இல்லை..இல்லவே இல்லை"டேரா டண்டா உடாவே"
இப்படிக்கு
பாபாவின் உண்மையான சீடனாக துடிக்கும் மனிதன்

5 கருத்துரைகள்:

பாலா said...

நண்பரே ரஜினி என்னைக்காவது நான் பாபாஜிக்கு சீடன் ஆகப்போகிறேன் என்று சொன்னாரா. இல்லை எனக்கு அந்த தகுதி இருக்கிறது என்று சொன்னாரா? இல்லை இப்படி குடும்ப வாழ்வில் ஈடுபட்டவன் ஆன்மிகத்தில் ஈடுபடவே கூடாதா? ரஜினி சீடன் ஆக வேண்டுமா கூடாதா என்பது ரஜினிக்கும் பாபாஜிக்கும் உள்ள ஒரு பிரச்சனை. இதில் நீங்கள் ஏன் தலையை நுழைக்கிறீர்கள். நீங்கள் பாபாவுக்கு சீடன் ஆக துடிக்கிறீர்கள் அல்லவா? இந்த மாதிரி தேவை இல்லாத விஷயங்களில் மற்றவரை இழித்து பேசி அதில் புளகாங்கிதம் அடையும் வரை உங்கள் அகங்காரம் மறையப்போவதும் இல்லை. நீங்கள் சீடர் ஆகப்போவதும் இல்லை.

இப்படிக்கு
கர்ம யோகம் படித்து இல்லறத்தில் ஆன்மிகம் காணும் சராசரி மனிதன்

பரதேசி said...

திரு பாலா அவர்களே நான் பாபாவின் சீடர் ஆகும் அளவு தகுதி இல்லாதவன்.முயற்சிப்பதில் தவறு இல்லையே.
ஆனால் பிற மனிதரை ஏமாற்றத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க இது போல் சுட்டி காட்டுவது கூட ஒரு சேவை என்பது தான் எண்ணம.
அகங்காரம் என்பது என்னை பொறுத்த மட்டில் காலின் பாதம் வரை தான்.தலைக்கு அல்ல.இது நான் புளகாங்கிதம் அடைய எழுதிய பதிவு அல்ல.ஆற்றாமையில் எழுதியது.

நிகழ்காலத்தில்... said...

//"பாபாஜிக்கு ரஜினி சீடர் ஆக முடியுமா? நீங்களே முடிவு சொல்லுங்கள்."//

ஆகமுடியும், நீங்களும் சீடர் ஆகமுடியும் :))

Bala said...

Hello MR - Poi pillai kutti ellam padika vainga..

atha vittu - Evar enna pannarar, avar enna panna porarnu ...

Jayadev Das said...

ஆன்மிகம் என்றால், பணக்காரன் ஏழை எனப் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும், கல்யாணம் ஆகதவன், ஆனவன், சந்நியாசம் வாங்கியவன், ஆண் பெண் என எல்லோருமே பின்பற்றக் கூடிய வகையில் இருக்க வேண்டும். காரணம்
எல்லோருமே இறைவனின் படைப்பு, இறைவனிடம் சென்றடைய எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. விஜய் தொலைக் காட்சியில அந்த பாபாவோட இமயமலை குகையைக் காமிச்சாங்க. நம்மைப் போன்ற சாதாரண மக்களில் எத்தனை பேர் அந்த இமயமலைக்குச் பணம் செலவழித்துச் செல்ல முடியும், அந்த இடம் தான் எத்தனை பேருக்கு இடம் கொடுக்கும்? குப்பனோ சுப்பனோ போனா நம்ம சூப்பர் ஸ்டாருக்கு கிடைச்ச அதே மரியாதை, உபசரிப்பு, கவனிப்பு கிடைக்குமா? இல்ல இவரு மாதிரி சிலருக்கு மட்டும் தான் கடவுளா?

 

Blogger

இங்கு வரும் செய்திகளுக்கு யாரும் பொறுப்பு அல்ல.