மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் அப்போது, தமிழ்நாட்டில் வன்முறையை அரங்கேற்றுவது தி.மு.கவா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியா என்று கேள்வி எழுப்பினார். அவர் பேசியதை தொகுத்திருக்கிறோம்.
" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கோடிகளுக்காக விலை போகமாட்டார்கள். கோடிக்கணக்கான மக்களுக்களின் நல்வாழ்வுக்காக என்ன விலை வேண்டுமானாலும் தருவோம். எங்களது கிளைச்செயலாளர் முதல் மாநில செயலாளர் வரை, கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை நாங்கள் அரசியலில் பங்கேற்பது கொள்கைக்காக.கோடிகளுக்காக அல்ல.
" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கோடிகளுக்காக விலை போகமாட்டார்கள். கோடிக்கணக்கான மக்களுக்களின் நல்வாழ்வுக்காக என்ன விலை வேண்டுமானாலும் தருவோம். எங்களது கிளைச்செயலாளர் முதல் மாநில செயலாளர் வரை, கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை நாங்கள் அரசியலில் பங்கேற்பது கொள்கைக்காக.கோடிகளுக்காக அல்ல.
கடந்த சட்டசபை கூட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு எல்லாம் சென்னை மறைமலைநகரில் 56 ஏக்கர் நிலம் ஒதுக்கி அதில் வீட்டடி மனைகள் தருவதாக கலைஞர் சொன்னார்.
மற்ற கட்சிகள் எல்லாம் இந்த வீட்டடி மனைகளுக்கு எந்த ஆட்சேபனையும் சொல்லாத போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான் தமிழக ஏழை மக்களுக்கு வீட்டடி மனைகளை கொடுத்து விட்டு பிறகு சட்டமன்ற உறுப்பினர்களை பற்றி யோசிக்கலாம் என்றது. நாடாளுமன்றத்தில் இப்போது எம்.பிக்களுக்கு உள்ள சம்பளம் போதவில்லை. அதை உயர்த்த வேண்டும் என்றார்கள். நாங்கள் அதை நிராகரித்தோம். நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள். சம்பள உயர்வு கேட்க அல்ல.
மற்ற கட்சிகள் எல்லாம் இந்த வீட்டடி மனைகளுக்கு எந்த ஆட்சேபனையும் சொல்லாத போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான் தமிழக ஏழை மக்களுக்கு வீட்டடி மனைகளை கொடுத்து விட்டு பிறகு சட்டமன்ற உறுப்பினர்களை பற்றி யோசிக்கலாம் என்றது. நாடாளுமன்றத்தில் இப்போது எம்.பிக்களுக்கு உள்ள சம்பளம் போதவில்லை. அதை உயர்த்த வேண்டும் என்றார்கள். நாங்கள் அதை நிராகரித்தோம். நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள். சம்பள உயர்வு கேட்க அல்ல.
காஷ்மீரில் கலவரம் நடந்து வருகிறது. அங்கே ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு 80 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி விவாதிக்க டெல்லியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் கடந்த 15 மாதங்களில் மேற்குவங்கத்தில் எங்களது தோழர்கள் 270 பேர் மாவோயிஸ்டுகளாலும்,மம்தா பானர்ஜியின் தூண்டுதலாலும், காங்கிரஸ் அரசின் துணையோடு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது மூடி மறைக்கப்படுகிறது. சில ஊடகங்களும் இந்த படுகொலை சம்பவத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காரணம், மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்த காங்கிரசும் பெருமுதலாளிகளும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன?
நாங்கள் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை தட்டி கேட்கிறோம். செப்டம்பர் 7 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, உழைக்கும் மக்களுக்கான ஆதரவு போராட்டத்தை நடத்தினோம். இந்த போராட்டங்கள் காங்கிரசுக்கு உறுத்துகிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு உறுத்துகிறது. எனவே கம்யூனிஸ்டு கட்சியை அழித்து விட்டால் தங்களை யாரும் எதிர்க்க முடியாது என்று சிந்திக்கிறார்கள் அவர்கள். கடந்த ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் ஏராளமான வங்கிகள் திவால் ஆகின. இன்சூரன்சு நிறுவனங்கள் திவாலாகின. பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. கடும் நெருக்கடி ஏற்பட்டது அமெரிக்க அரசாங்கத்திற்கு. அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இந்த விளைவு பலநாடுகளில எதிரொலித்தது.
ஆனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. காரணம், இந்தியாவில் இது போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் அரசின் கையில் உள்ளன. எல்லாம் அரசுக்கு சொந்தமானதாக இருக்கிறது. ஆகவே பாதிப்பு இல்லை என்றார் ஒரு அமெரிக்க வல்லுநர். நாங்கள் அரசோடு கைகோர்த்து கூட்டணியில் இருந்த காலங்களில் தனியார் மயமாக்கும் முயற்சிகளை எல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இடதுசாரி இயக்கங்கள் தான் இப்படி பகாசுர பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்திய நிறுவனங்கள் தீனியாவதை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. எங்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் தான் அமெரிக்க முதலாளிகளுக்கும், இந்திய பெருமுதலாளிகளுக்கும்,காங்கிரசுக்கும் கோபத்தை வரவழைக்கிறது.
இந்திய அணுசக்தி கொள்கை மசோதாவில் அமெரிக்க தலையிடுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற சில நிபந்தனைகளை விதிக்கின்றன. அதாவது இந்திய அரசின் நிறுவனங்களில் தங்களை முதலீடு போட அனுமதி கேட்கின்றன. இதை தடுத்து நிறுத்த இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்சு நிறுவனமான எல்.ஐ.சியின் வருமானம் 23 478 கோடி. இது இந்திய பொருளாதரத்திற்கு முதுகெழும்பாக உள்ளது. இதனை அபகரிக்க அமெரிக்க பெருமுதலாளிகள் முயல்கின்றனர். இடதுசாரிகள் இதற்கு குறுக்கே நிற்கிறார்கள். இது போல் இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 13 லட்சம் கோடி. இந்த வணிகத்தில் 8 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சில்லறை வணிகத்தையும் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்க மம்தாபானர்ஜியும்,காங்கிரசும் விரும்புகிறார்கள். ஆனால் இதை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக போராடுகிறது. இது ஏகாதிபத்தியத்தையும் காங்கிரசையும் மம்தாவையும் உலுக்குகிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்டினால் எளிதாக வெளிநாட்டு மூலதனத்தை அனுமதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்த ராகுலை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. 'கம்யூனிஸ்டு காலாவதியான தத்துவம்' என்கிறார். நான் ராகுலை பார்த்து கேட்கிறேன். ஏழை மக்களுக்காக மேற்கு வங்காளத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலம் 30 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி இப்படி ஏதாவது நல்ல விஷயங்களை செய்திருக்கிறதா? தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. ஆனால் மேற்குவங்காளத்தில் வெறும் 525 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு 11 பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆளும் கேரளா மேற்குவஙகாளத்தை காப்பது இந்திய நாட்டை காப்பது போல் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். சென்னையில் முற்றுகை போராட்டம் என்று அறிவித்ததும் கைது சிறையடைப்பு என்று மிரட்டுகிறார்கள். கலைஞர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் அராஜகம் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்கிறார். தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்துவதை அராஜகம் என்கிறார். நான் கேட்கிறேன்...மக்களுக்காக போரடியவர்களை வெட்டிக் கொன்றவர்கள் யார்? தி.மு.க வா? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியா?
மதுரையில் தினகரன் பத்திரிகையை எரித்து 3 அப்பாவி ஊழியர்களை கொன்றுவிட்டு இன்றைக்கு கைகோர்த்து திரிகிறீர்களே.. யார் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்? நீங்கள் யாரை பார்த்து வன்முறையில் ஈடுபடுவதாக சொல்கிறீர்கள்? நீங்கள் 1978 ல் என்.எல்.சி, சிம்சன் என்று எங்கும் தொழிலாளர் போராட்டம் நடந்தபோது அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொன்னவர் தானே நீஙகள்?
மார்க்சிஸ்டுகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக,தலித்களுக்காக, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறோம். ஆனால் கலைஞர் அவர்களே...இந்த சம்பவங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்.உத்தப்புரம் மக்களுக்கு அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற கோரி நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் தோழர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது எங்கள் மூத்த தோழர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தீர்கள்.
மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருடன் நடந்த அந்த பேச்சு வார்த்தையில் எஙகள் தோழர்கள் கலந்து கொண்டார்கள். எங்களுடன் பேச்சு வார்த்தையில் இருந்த போலீஸ் சூப்பிரண்டுக்கு திடீரென்று சென்னையில் இருந்து போன் வருகிறது. அந்த போன் வந்தவுடன் அந்த அதிகாரியின் பேச்சு வார்த்தையில் வித்தியாசம் வருகிறது. திடீரென்று எங்களை கைது செய்வதாக சொல்கிறார். சென்னையிலிருந்து அந்த அதிகாரிக்கு போன் பண்ணியது யார்?
மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருடன் நடந்த அந்த பேச்சு வார்த்தையில் எஙகள் தோழர்கள் கலந்து கொண்டார்கள். எங்களுடன் பேச்சு வார்த்தையில் இருந்த போலீஸ் சூப்பிரண்டுக்கு திடீரென்று சென்னையில் இருந்து போன் வருகிறது. அந்த போன் வந்தவுடன் அந்த அதிகாரியின் பேச்சு வார்த்தையில் வித்தியாசம் வருகிறது. திடீரென்று எங்களை கைது செய்வதாக சொல்கிறார். சென்னையிலிருந்து அந்த அதிகாரிக்கு போன் பண்ணியது யார்?
இது போல் குடியாத்தம் பகுதியில் ஒரு பகுதியில் 22 ஆண்டுகளாக குடிஇருந்து வந்த தலித் மக்களை திடிரென்று திமுகவை சேர்ந்த செல்வம் என்பவர் புல்டோசருடன் வந்து அங்கிருந்த வீடுகளை எல்லாம் இடித்து தள்ளுகிறார். நீதி கேட்கப்போன எங்களது எம்.எல்.ஏ வுடன் ஆர்.டி,ஓ பேச்சுவ ார்த்தை நடத்துகிறார். திடீரென்று அவருக்கு சென்னையிலிருந்து போன் வருகிறது. அதற்கடுத்து எங்களது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். இந்த அதிகாரிக்கு சென்னையிலிருந்து போன் பண்ணியது யார்? இதையெல்லாம் சொல்ல நீங்கள் தயாரா?
மதுரையில் உங்களது திருக்குமரன் வன்முறையை தூண்டிவிடுவது உங்களுக்கு தெரியாதா? நான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உங்களுக்கு சார்பில் சொல்லிக்கொள்கிறேன். மார்க்சிஸ்டுகள் சாவுக்கு அஞ்சமாட்டோம். காரணம் சாவிலும் எங்களுக்கு மரணமில்லை. எஙகளுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. ஆனால் அதை முறியடிக்க மார்க்சிஸ்டுகளால் முடியும்.
நாங்கள் வெல்வோம்.இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். கலைஞர் என்ன சொல்லப் போகிறார்....பார்க்கலாம்.

0 கருத்துரைகள்:
Post a Comment