Pages

Saturday, September 18, 2010

மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அரசுடமையாக்கினால் என்ன?


மெட்ரிக்குலேஷன் பள்ளி மாஃபியாக்கள் அரசை எதிர்த்து தங்களது பலத்தை காட்ட தொடங்கி விட்டார்கள்.1.கல்விகட்டண நிர்ணயத்துக்கு நீதிமன்றத்தில் ஏறி இடைக்கால் தடை வாங்கியது.2. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் ஒரு மாணவன் விபத்தில் இறந்ததையடுத்து அந்த பள்ளி பெற்றோர்களால் சூறையாடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் எல்லாம் மூடப்பட வேண்டும் என்று அறவிப்பு.
ஆக...இவர்கள் நினைத்தால் பள்ளிகளை பூட்டிவிட்டு மாணவர்களின் படிப்பை தடுக்க முடியும் என்பது தான் நிலைமை. ஆக இந்த பள்ளிகளை எல்லாம் அரசு உடைமை ஆக்கினால் மட்டுமே இந்த மிரட்டல்கள் எல்லாவற்றுக்கு தீர்வு. இவர்கள் என்ன லட்சணத்தில் பள்ளி நடத்துகிறார்கள் என்பதற்கு எதுவும் ஆதாரம் இருக்கிறதா? இவர்களின் லட்சணம் என்ன...பார்க்கலாம்.


தங்கள் குழந்தைகள் நுனிநாக்கு ஆங்கிலம் பேச வேண்டும். இது தான் நகரத்தில் வாழும் ஒரு நடுத்தரவாசிகளின் கனவு. பெற்ற பிள்ளைகளின் அறிவுக்கண்ணை திறக்க வேண்டும், எப்படியாவது பிள்ளைகளை படிக்க வைத்து டாக்டராகவோ என்ஜினியராகவோ ஆக்கிவிட வேண்டும். அவர்கள் கோட்டும் சூட்டும் போட்டு துரைமார்களை போல ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்ட வேண்டும்.இந்த கனவுலகத்தை புரிந்து கொண்டு இந்த குட்டையில் வலைவீசி மீன் பிடிக்க முளைத்தவை தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.

ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனி தான் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கான அஸ்திவாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. அது வரை சான்றிதழ் கல்வித்திட்டம்,கட்டுப்பாடுகள் இல்லாத திண்ணைக்கல்வி, குருகுலக்கல்வி போன்றவை தான் இருந்தன். கிளார்க்குகளை உருவாக்கும் மெக்கலே அளித்த குறிப்புகளை தொடரந்து தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஐரோப்பிய அறிவியல் பாடங்களை நடத்தும் பள்ளிகளை தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலம் வாயிலாக தான் அப்போது நீதிமன்றங்களில் வாதாட முடியும் என்ற நிலை வேறு இருந்ததால் ஆங்கிலக்கல்வி புகழ்பெற்றது.


தமிழ்நாட்டில் 1984 -85 நிலவரப்படி 20 உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இருந்தன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கில் பெருகியிருக்கிறது. 


இப்போது ஒரு ஓட்டு வீடு கொஞ்சம் காலி இடம் இருந்தால் கூட அங்கே ஒரு ஆங்கிலப்பள்ளி என்று போர்டுகள் இளித்துக் கொண்டிருக்கின்றன. சிட்டிபாபு அறிக்கை கூறுவதன்படி,சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1852 ல் நாடு முழுவதும் வெறும் 52 ஆக இருந்த இந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டில் மட்டும் 3200 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை உயர்ந்த அளவு இந்த பள்ளிகளின் தரம் உயர்ந்திருந்ததா என்றால் இல்லை என்பது தான் பதில். பெரும்பாலும் பள்ளி பிசினஸ் கையை சுட்டுக் கொள்ளாத காசு கொட்டும் ஒரு தொழில் என்பது தான் பெரும்பாலான பள்ளிகளின் நோக்கம் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. 2004 க்கு முன்னதாக இப்படி புற்றீசல் போல முளைத்த மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கையை கண்டு மிரண்டு போன அரசு அந்த பள்ளிகளுக்கு சில விதிமுறைகளை வகுத்தது.


பொதுவாக தரத்தை மதிப்பிட பல அளவுகோல்கள் இருந்தாலும் மூன்று அம்சங்களை முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம். அவை பள்ளியின் எவ்வளவு இடத்தில் அமைந்துள்ளது. கட்டிடங்கள் போதிய அளவு காற்று வெளிச்சம் வருமளவு வசதியான அமைப்புடையதா? ஆசிரியர்கள் போதிய கல்வித்தகுதியை உடையவர்களாக இருக்கிறார்களா? இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் ஆளுமை, தேர்ச்சிவிகிதம்,தனித்திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவை எந்த அளவில் இருக்கின்றன என்பது போன்றவற்றை ஆய்வு செய்தால் அந்த பள்ளிகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் யோக்கிதையும் லட்சணமும் துல்லியமாக தெரிந்து விடும்.


ஆனால் ஒரு ஆய்வை மேற்கொண்டதில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 40 சதவீத மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாணவர்கள் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள உதவும் விளையாட்டு மைதானமே கிடையாது. 21 சதவீத பள்ளிகளில் நூலகம் என்றால் என்பது தான் கேட்குமளவுக்கு நிலைமை.


பின்தங்கிய மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் இருந்த அளவு கூட சென்னை, மதுரையில் இயங்கிய பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் பல பள்ளிகளில் இல்லை. இன்னும் சில பள்ளிகளில் கம்ப்யூட்டரின் வரைபடத்தை வரைந்து காட்டி அதில் உள்ள பாகங்களை சொல்லி தரும் நிலைமை தான் இருப்பதாக எல்லாம் ஆய்வில் தெரியவந்தன.

இதிலும் 40 சதவீத பள்ளிகளில் வீட்டில் பொழுது போகாமல் இருந்தவர்களை எல்லாம் அழைத்து வந்து ஆசிரியர்களாக மாற்றி மனம்போன போக்கில் பாடம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு பட்டமோ, பட்டயமோ கூட இல்லை என்பது தான் கொடுமை. அவர்களிலும் கூட ஒரு சிலர் இப்படி சில பள்ளிக்கூடஙகளில் வாத்தியார் பயிற்சி எடுத்தவுடம் எக்ஸ்பீரியன்ஸ் கணக்கு காட்டி இது போன்ற மற்றொரு பள்ளிக்கு அப்ளிகேசன் போட்டு கூடுதல் சம்பளத்தில் வேலைக்கு போவது தான் அதை விட ஆச்சரியம். இப்படி கத்துக்குட்டி வாத்தியார்களில் வெறும் 10 சதவீதம் பேர் தான் ஒரே பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும மேல் குப்பை கொட்டுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


இவர்கள் அங்கிருக்கும் பாடப்புத்தகங்களையும் மாணவர்களையும் புரிந்து கொள்வதற்குள் அந்த ஆண்டு இறுதி தேர்வு நெருங்கிவிடும். மாணவர்களும் புரிந்த வரை தேர்வை எழுதிவிட்டு அரைகுறை மதிப்பெண்ணுடன் வந்து ஏதோ ஒரு கல்லூரியில் என்னவோ ஒரு பாடத்தில் டிகிரியோ எதுவோ படிக்க வேண்டியது தான். இப்படி லட்சணத்தில் தான் இன்றைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளன என்பது தான் கொடுமை. இவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தங்களிடம் இருக்கும் தகுதிகளை எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க துணிச்சல் இருக்கிறதா?


விதிமுறைகள் எவை?


மெட்ரிகுலேஷன் கல்வித்தரம் தொடர்பாக சிட்டிபாபு அறிக்கை பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அதில், இந்த பள்ளிகளை மாநகராட்சி எல்லைக்குள் துவக்க வேண்டுமானால் அந்த பள்ளியின் பெயரில் ஆறு கிரவுண்ட் அல்லது 33 சென்ட் நிலப்பரப்பும், மாவட்ட தலைநகருக்குள் தொடங்க வேண்டுமானால் எட்டுகிரவுண்ட் அல்லது 44 சென்ட் நிலமும், நகராட்சியில் பத்து கிரவுண்ட் அல்லது 55 சென்ட் நிலமும், நகர பஞ்சாயத்துக்களில் ஒரு ஏக்கரும், கிராமங்களில் 3 ஏக்கரும் இருக்க வேண்டும்.

ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 10 சதுர அடிகணக்கிடப்பட்டு வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் நூலகம் கட்டாயம் அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. 


உயர்நிலைப்பள்ளியானால் 1500 நூல்களும், மேல்நிலைப்பள்ளியானால் 3000 நூல்களும், பாடங்களை விளக்க சிடிகளும்,வீடியோ,புரொஜெக்டர் சாதனங்களும் இருக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை வரையறை செய்துள்ளது. இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய ஆய்வுக்கூடங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும். அத்துடன் விளையாட்டு மைதானங்களும் குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும்.

கேள்வி 1. இன்றைக்கு இப்படி விதிமுறைகளுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன.பள்ளிகல்வி இயக்குநரகம் இந்த பள்ளிகளுக்கு எல்லாம் எந்த அடிப்படையில அனுமதி அளித்தார்கள்?


1977 ஜுலையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் நிறுவப்பட்டது. இந்த பள்ளிகள் தமது விருப்பத்தின் படி பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் பின்பற்ற அனுமதிக்கப்பட்டது. ஆனால் இறுதி இரண்டு ஆண்டுகளுக்கு மாநில கல்வி தேர்வு இயக்குநரகம் அதாவது அரசு நிர்ணயித்துள்ள பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது தான் விதி. இதற்கு இடையில் எத்தனை பாடநூல் நிறுவனங்களிடம் கண்ட கண்ட புத்தகங்களையும் கமிஷனுக்காக வாங்கி குழந்தைகளின் தலையில் ஏற்றி பொதி சுமக்க வைக்கும் பள்ளிகள் தான் எத்தனை? இந்தியக்குழந்தைகளிடம் தங்கள் புத்தகங்களை பல ஆயிரம் கோடிகளில் வியாபாரம் செய்யும் அமெரிக்க புத்தகக்கம்பெனிகளிடமிருந்து இந்த மெட்ரிகுலேஷன் கல்வி தந்தைகள் வாங்கும் கமிஷன் எத்தனை லட்சம்?



கேள்வி 2. இந்த பகாசுர கம்பெனிகள் வடிவமைக்கும் புத்தகங்கள் எந்த அடிப்படையில் எந்த ஞானோதயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன?


ஒரு சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளியில் 800 குழந்தைகள் படிப்பதாக எடுத்துக்கொண்டு, ஒரு குழந்தைக்கு 30,000 பீஸ் என்று வைத்துக் கொண்டால் ஆண்டுக்கு வருமானம் 2 கோடியே 40 லட்சம். இப்படியே ஆண்டுக்கு ஆண்டு பெருக்கிக் கொண்டே போனால் அப்பாடி தலை சுற்றுகிறது...


கேள்வி 3. இந்த வருமானத்திற்கு எல்லாம் கணக்குகளை எப்படி பராமரிக்கிறார்கள்? இந்த வருமானம் எல்லாம் எங்கே போகிறது?


ஆக..இப்படி தங்கள் நோக்கத்திற்கு விளையாடும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை அரசுடைமையாக்கினால் தான் இந்த மெட்ரிக்குலேஷன் மாபியாக்கள் அடங்குவார்கள். இல்லாவிட்டால் அரசை மிரட்டுவதொடு ,பள்ளிகூடங்களை தங்கள் இஷ்டத்துக்கு இழுத்து பூட்டி நினைத்ததை சாதிக்க எண்ணுவார்கள்.ஆக....


ஒரு காலத்தில் தனியாரிடம் இயங்கிய பேருந்துகளையும், வங்கிகளையும் அரசுடையாமக்கிய போது எந்த எதிர்ப்பும் வரவில்லை. அது போல்  மெட்ரிக்குலேஷன் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கினால் என்ன?



அரசுடமை ஆக்கினால் என்ன ஆகும் என்பதை இதை படிக்கும் பதிவர்களின் எண்ண அலைகளை பிரதிபலிக்க விட்டு விடுகிறேன்.தயவு செய்து தங்கள் பின்னூட்டம் வரவேற்கபடுகிறது.












Friday, September 17, 2010

என்னய்யா வேணும் உனக்கு? கேட்டு வாங்கிக்க வம்பு பண்ணாத! உமாசங்கரிடம் கலைஞர்



தலித் மக்களின் தலைவனாக காட்டிக் கொள்ளும் சிலர் ஆட்சி அதிகார வர்க்கத்தின் அடிவருடிகளாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் முகமூடி உமாசங்கர் ஐ.ஏ.எஸ் மூலம் தோலுரிக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்த அவர் அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தி.மு.க அரசை நடுங்க வைக்கும் சில விஷயங்களை சொல்லிவிட்டு போயிருக்கிறார். இது பற்றி தமிழக அரசியல் கட்டுர வெளியிட்டுள்ளது.

'சுடுகாட்டுக் கூரை அமைத்ததில் முறைகேடு தென்னிந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் நடந்த தவறுகள்,கிரானைட் குவாரி குத்தகை விடப்பட்டதில் நடந்த குழப்பங்கள்,எல்காட் அரசு கேபிள் டிவி நிர்வாகம் தொடர்பான தவறுகள் என ஏற்கனவே தான் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் நடந்த ஊழல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

இப்படி இவர் முறைகேடுகளை வெளிச்சம் போடும் விஷயத்தில் ஆடசி மேலிடத்தில் இருப்பவர்களோடு மோதல் ஏற்பட சாதி பிரச்சனை ஒன்றை கையில் எடுத்து சமீபத்தில் இவரை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு.
இவருக்கு ஆதரவாக தலித் அமைப்புகள் களத்தில் குதித்து போராட்டம் நடத்தஆரம்பிக்க சட்டென பின்வாங்கியது அரசு. 

அவருக்கு பிறப்பிக்கப்பட்ட சஸ்பென்ட் உத்தரவை திரும்ப பெற்றது. டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்த உமாசங்கர் அங்கு பேசியதில், அரசாங்கம் தனக்கு இழைத்த கொடுமைகளை விவரித்து பேசியிருக்கிறார்.
உமாசஙகரின் பேச்சின் சாரம்சம்:

" நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மையான நிர்வாகம் வேண்டும். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்ததும் அமெரிக்காவில் இருந்து எனக்கு பத்து இமெயில் கடிதங்கள் வந்தன. மெயில் அனுப்பியவர்களில் ஒருவர் மட்டும் தான் தாழ்த்தப்பட்டவர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சாதிய கண்ணோட்டத்துடன் பார்க்க தேவையில்லை என்பதற்காகத்தான். ஊழல் அற்ற நேர்மையான ஒரு அதிகாரியை சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது.

மாறன் சகோதரர்களுக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இருந்த பிரச்சனைகள் விலகி இரண்டு தரப்பும் ஒன்று சேர்ந்தது. அதன்பிறகு தான் சுமஙகலி கேபிள் டிவியால் அரசு கேபிள் நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். அதில் சுமங்கலி கேபிள் டிவி அரசுடையமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தேன்.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் குற்ற செயல்களுக்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உடந்தையாக இருக்கும் விஷயத்தையும் அரசுக்கு சுட்டிக்காட்டி இருந்தேன். உடனே, பெரியவர் (கலைஞர்) என்னை அழைத்தார். 'உனக்கு என்னய்யா வேணும்? கேட்டு வாங்கிக்க! தேவையில்லாம பிரச்சனை பண்ணதேன்' னு சொன்னார். 'எனக்கு எதுவும் வேண்டாம். என் கடமையை என்னை செய்ய விட்டால் போதும்'னு சொல்லிட்டு திரும்பிட்டேன். 

விடுவார்களா மாறன் சகோதர்கள்?அவர்கள் பத்திரிக்கை மூலமாக என்னை தூற்ற ஆரம்பித்தார்கள். எனக்கு நான்கு கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக செய்தி போட்டார்கள். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். ' குறிப்பிட்ட அநத சொத்துக்கான பத்திரம் தொலைந்து போய்விட்டது. செய்தி போட்டவர்கள்,பத்திரத்தை கொடுத்து விட்டு ,99 சதவிகித சொத்தை எடுத்து செல்லலாம்' என்று இன்டர் நெட் மூலமாக சவாலாகவும் கிண்டலாகவும் பதிலளித்தேன்.

கலைஞரின்  துணைவியார் ராசாத்திஅம்மாள் மீனவர்களுக்கு வயர்லெஸ் டெண்டர்ஐ தனக்கு தெரிந்தவருக்கு கொடுக்க சொன்னார். மறுத்து விட்டேன்.
எல்காட் நிறுவன தலைவர் மற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் ஈ.டி.எல் என்ற 700 கோடி மதிப்புள்ள நிறுவனம் சூறையாடப்பட்டது. இது பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பினேன்.


அதிகார மையத்தின் உச்சத்தில் உள்ள மாறன் சகோதர்களையும் கலைஞர்,அழகிரி இவர்களை எல்லாம் எதிர்த்து பூணைக்கு மணிட்டியிருக்கிறோம். இதனால் என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் இருக்கிறீர்கள். பத்திரிகைகள் இருக்கிறது. அது போதும். யாரையும் எதிர்கொள்வேன். இனியும் என் வேகத்தை குறைக்க மாட்டேன். 



சில தலித் தலைவர்கள் என் விசயத்தில் பதுங்கிஒதுங்குவது ஏன்?

பாவம்..அவர்கள் அரசியல் வாதிகளை அண்டி பிழைக்க வேண்டியது இருக்கிறது.
இவர்கள் தான் தலித் மக்கள் உரிமைக்கு போராடுகிறார்கள்.

தமிழக அரசு என் மீது வழக்கு போடா திட்டமிட்டிருப்பதாக் தகவல் வருகிறது.
இதற்கெல்லாம் பயப்படுகிரவன் அல்ல உமாசங்கர்.

இப்படி ஏராளமான விஷயங்களை பேசியிருக்கிறார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

பெரிய பெரிய ஆட்டுகிடை மீசை எல்லாம் வைத்துக்கொண்டு அடிவருடிகளாக இருக்கும் "வெத்து மீசை" டம்மிபீஸ் ஆசாமிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு துணிச்சலான அதிகாரி.

கைகொடுப்போம் உமாசங்கருக்கு... 

நீதி
அதிகாரம் : வெருவந்தசெய்யாமை
குறள் : 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
பொருள்: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

மதுரையில் உங்களது திருக்குமரன் வன்முறையை தூண்டிவிடுவது உங்களுக்கு தெரியாதா-கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் அப்போது, தமிழ்நாட்டில் வன்முறையை அரங்கேற்றுவது தி.மு.கவா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியா என்று கேள்வி எழுப்பினார். அவர் பேசியதை தொகுத்திருக்கிறோம்.

" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கோடிகளுக்காக விலை போகமாட்டார்கள். கோடிக்கணக்கான மக்களுக்களின் நல்வாழ்வுக்காக என்ன விலை வேண்டுமானாலும் தருவோம். எங்களது கிளைச்செயலாளர் முதல் மாநில செயலாளர் வரை, கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை நாங்கள் அரசியலில் பங்கேற்பது கொள்கைக்காக.கோடிகளுக்காக அல்ல.
கடந்த சட்டசபை கூட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு எல்லாம் சென்னை மறைமலைநகரில் 56 ஏக்கர் நிலம் ஒதுக்கி அதில் வீட்டடி மனைகள் தருவதாக கலைஞர் சொன்னார். 

மற்ற கட்சிகள் எல்லாம் இந்த வீட்டடி மனைகளுக்கு எந்த ஆட்சேபனையும் சொல்லாத போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான் தமிழக ஏழை மக்களுக்கு வீட்டடி மனைகளை கொடுத்து விட்டு பிறகு சட்டமன்ற உறுப்பினர்களை பற்றி யோசிக்கலாம் என்றது. நாடாளுமன்றத்தில் இப்போது எம்.பிக்களுக்கு உள்ள சம்பளம் போதவில்லை. அதை உயர்த்த வேண்டும் என்றார்கள். நாங்கள் அதை நிராகரித்தோம். நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள். சம்பள உயர்வு கேட்க அல்ல.

காஷ்மீரில் கலவரம் நடந்து வருகிறது. அங்கே ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு 80 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி விவாதிக்க டெல்லியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் கடந்த 15 மாதங்களில் மேற்குவங்கத்தில் எங்களது தோழர்கள் 270 பேர் மாவோயிஸ்டுகளாலும்,மம்தா பானர்ஜியின் தூண்டுதலாலும், காங்கிரஸ் அரசின் துணையோடு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது மூடி மறைக்கப்படுகிறது. சில ஊடகங்களும் இந்த படுகொலை சம்பவத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காரணம், மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்த காங்கிரசும் பெருமுதலாளிகளும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன?

நாங்கள் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை தட்டி கேட்கிறோம். செப்டம்பர் 7 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, உழைக்கும் மக்களுக்கான ஆதரவு போராட்டத்தை நடத்தினோம். இந்த போராட்டங்கள் காங்கிரசுக்கு உறுத்துகிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு உறுத்துகிறது. எனவே கம்யூனிஸ்டு கட்சியை அழித்து விட்டால் தங்களை யாரும் எதிர்க்க முடியாது என்று சிந்திக்கிறார்கள் அவர்கள். கடந்த ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் ஏராளமான வங்கிகள் திவால் ஆகின. இன்சூரன்சு நிறுவனங்கள் திவாலாகின. பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. கடும் நெருக்கடி ஏற்பட்டது அமெரிக்க அரசாங்கத்திற்கு. அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இந்த விளைவு பலநாடுகளில எதிரொலித்தது.

ஆனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. காரணம், இந்தியாவில் இது போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் அரசின் கையில் உள்ளன. எல்லாம் அரசுக்கு சொந்தமானதாக இருக்கிறது. ஆகவே பாதிப்பு இல்லை என்றார் ஒரு அமெரிக்க வல்லுநர். நாங்கள் அரசோடு கைகோர்த்து கூட்டணியில் இருந்த காலங்களில் தனியார் மயமாக்கும் முயற்சிகளை எல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இடதுசாரி இயக்கங்கள் தான் இப்படி பகாசுர பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்திய நிறுவனங்கள் தீனியாவதை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. எங்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் தான் அமெரிக்க முதலாளிகளுக்கும், இந்திய பெருமுதலாளிகளுக்கும்,காங்கிரசுக்கும் கோபத்தை வரவழைக்கிறது.

இந்திய அணுசக்தி கொள்கை மசோதாவில் அமெரிக்க தலையிடுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற சில நிபந்தனைகளை விதிக்கின்றன. அதாவது இந்திய அரசின் நிறுவனங்களில் தங்களை முதலீடு போட அனுமதி கேட்கின்றன. இதை தடுத்து நிறுத்த இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்சு நிறுவனமான எல்.ஐ.சியின் வருமானம் 23 478 கோடி. இது இந்திய பொருளாதரத்திற்கு முதுகெழும்பாக உள்ளது. இதனை அபகரிக்க அமெரிக்க பெருமுதலாளிகள் முயல்கின்றனர். இடதுசாரிகள் இதற்கு குறுக்கே நிற்கிறார்கள். இது போல் இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 13 லட்சம் கோடி. இந்த வணிகத்தில் 8 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சில்லறை வணிகத்தையும் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்க மம்தாபானர்ஜியும்,காங்கிரசும் விரும்புகிறார்கள். ஆனால் இதை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக போராடுகிறது. இது ஏகாதிபத்தியத்தையும் காங்கிரசையும் மம்தாவையும் உலுக்குகிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்டினால் எளிதாக வெளிநாட்டு மூலதனத்தை அனுமதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்த ராகுலை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. 'கம்யூனிஸ்டு காலாவதியான தத்துவம்' என்கிறார். நான் ராகுலை பார்த்து கேட்கிறேன். ஏழை மக்களுக்காக மேற்கு வங்காளத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலம் 30 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி இப்படி ஏதாவது நல்ல விஷயங்களை செய்திருக்கிறதா? தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. ஆனால் மேற்குவங்காளத்தில் வெறும் 525 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு 11 பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆளும் கேரளா மேற்குவஙகாளத்தை காப்பது இந்திய நாட்டை காப்பது போல் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். சென்னையில் முற்றுகை போராட்டம் என்று அறிவித்ததும் கைது சிறையடைப்பு என்று மிரட்டுகிறார்கள். கலைஞர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் அராஜகம் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்கிறார். தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்துவதை அராஜகம் என்கிறார். நான் கேட்கிறேன்...மக்களுக்காக போரடியவர்களை வெட்டிக் கொன்றவர்கள் யார்? தி.மு.க வா? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியா?
மதுரையில் தினகரன் பத்திரிகையை எரித்து 3 அப்பாவி ஊழியர்களை கொன்றுவிட்டு இன்றைக்கு கைகோர்த்து திரிகிறீர்களே.. யார் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்? நீங்கள் யாரை பார்த்து வன்முறையில் ஈடுபடுவதாக சொல்கிறீர்கள்? நீங்கள் 1978 ல் என்.எல்.சி, சிம்சன் என்று எங்கும் தொழிலாளர் போராட்டம் நடந்தபோது அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொன்னவர் தானே நீஙகள்?

மார்க்சிஸ்டுகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக,தலித்களுக்காக, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறோம். ஆனால் கலைஞர் அவர்களே...இந்த சம்பவங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்.உத்தப்புரம் மக்களுக்கு அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற கோரி நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் தோழர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது எங்கள் மூத்த தோழர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தீர்கள். 

மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருடன் நடந்த அந்த பேச்சு வார்த்தையில் எஙகள் தோழர்கள் கலந்து கொண்டார்கள். எங்களுடன் பேச்சு வார்த்தையில் இருந்த போலீஸ் சூப்பிரண்டுக்கு திடீரென்று சென்னையில் இருந்து போன் வருகிறது. அந்த போன் வந்தவுடன் அந்த அதிகாரியின் பேச்சு வார்த்தையில் வித்தியாசம் வருகிறது. திடீரென்று எங்களை கைது செய்வதாக சொல்கிறார். சென்னையிலிருந்து அந்த அதிகாரிக்கு போன் பண்ணியது யார்?

இது போல் குடியாத்தம் பகுதியில் ஒரு பகுதியில் 22 ஆண்டுகளாக குடிஇருந்து வந்த தலித் மக்களை திடிரென்று திமுகவை சேர்ந்த செல்வம் என்பவர் புல்டோசருடன் வந்து அங்கிருந்த வீடுகளை எல்லாம் இடித்து தள்ளுகிறார். நீதி கேட்கப்போன எங்களது எம்.எல்.ஏ வுடன் ஆர்.டி,ஓ பேச்சுவ ார்த்தை நடத்துகிறார். திடீரென்று அவருக்கு சென்னையிலிருந்து போன் வருகிறது. அதற்கடுத்து எங்களது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். இந்த அதிகாரிக்கு சென்னையிலிருந்து போன் பண்ணியது யார்? இதையெல்லாம் சொல்ல நீங்கள் தயாரா?

மதுரையில் உங்களது திருக்குமரன் வன்முறையை தூண்டிவிடுவது உங்களுக்கு தெரியாதா? நான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உங்களுக்கு சார்பில் சொல்லிக்கொள்கிறேன். மார்க்சிஸ்டுகள் சாவுக்கு அஞ்சமாட்டோம். காரணம் சாவிலும் எங்களுக்கு மரணமில்லை. எஙகளுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. ஆனால் அதை முறியடிக்க மார்க்சிஸ்டுகளால் முடியும்.

நாங்கள் வெல்வோம்.இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். கலைஞர் என்ன சொல்லப் போகிறார்....பார்க்கலாம்.

Friday, September 10, 2010

நாம் எந்த நாட்டில் இருக்கிறோம்? நமக்கு யார் பாதுகாப்பு?



கடைசியாக பூணை வெளியில் வந்து விட்டது. இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு( அதுவும் கொழும்பில்) பயிற்சி அளிக்கப்பட்ட செய்தி வந்திருக்கிறது. வழக்கம் போல் தலையாட்டி மன்மோகன் சிங் அரசாங்கம் இதைப்பற்றி பெரிதாக கவலைப்பட்டது போல் தெரியவில்லை. காரணம்,அவருக்கு இந்தியாவுக்கு தான் பிரதம மந்திரியாக இருக்கின்றோமா என்று அவருக்கே தெரியாது. அதை அவர் சோனியாகாந்தியிடம் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளை நுழைய விட்டு அவர்கள் ஆடிய ஆட்டம் இந்தியாவின் பாதுகாப்பு ஓட்டையை கேள்விக்குறியாக்கியது. தற்போது இந்திய துணைராணுவப்படை மீது நிராயுதபாணியான மக்கள் 'கல்லெறி' ஆயுதத்தை பிரயோகித்து விரட்டுகிறார்கள்.

ஜார்கண்ட்,பீகாரில் மாவோயிஸ்டுகள், பாட்டி வடை சுட்ட போது தூக்கி போன காக்காயை போல போலீசை கொத்திக் கொண்டு போய்விடுகிறார்கள. ஆக மத்திய அரசினால் எதுவும் முடியாத இயலாமை.இப்படி இயலாமையின் மொத்த உருவமான இந்திய அரசாங்கம் கொழும்பில் நடக்கும் நாடகத்தை அறியாமல் குறட்டை விடும் போது கொழும்பில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி!!
இந்த தீவிரவாதிகள் பயிற்சிகளத்திலிருந்து வெளியேறினால் முதலில் அவர்கள் நுழைவது தமிழகமாகவே இருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது தான். இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தை காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால் காப்பாற்றுமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் ஈழத்தில் நடந்த நிகழ்வுகள். இது பற்றிய ஒரு பார்வை.


கடந்த ஆண்டு ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட காற்றழுத்த 'தெர்மோபெரிக்' வேதிப்பொருள் குண்டுகளைப் பயன்படுத்தி ஏராளமான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இந்த குண்டுகளை இந்தியா தான சிங்களர்களுக்கு வழங்கியது என்ற செய்தி தெரிந்தது தான். இந்த குண்டுகள் பதுங்கு குடியிருப்பில் ஈழத்தமிழர்கள் மீது பயன்படுத்தப்பட்டது. இலங்கை அதிபர் ராசபக்சே இந்தியாவின் போரைத் தானே தான் நடத்தியதாக கூறியிருக்கிறார்.


மே 17 ஆம் தேதி மட்டும் குறுகிய 2 கிமீ நிலப்பகுதிக்குள் குண்டு மாரி பொழிந்து 20 ஆயிரம் பேரை ஒரு பகலுக்குள் கொன்று குவித்த சிங்களர்கள் மகிழ்ந்து கிடக்கின்றனர். பதுங்கு குழிக்குள்ளும் பிணங்கள், நிலப்பரப்பெங்கும் பிணங்கள்.அப்பாவித்தமிழர்களை போர் என்ற பெயரில் கொன்று குவிப்பதைக் கண்டு எஞசியோரையாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற நினைப்பில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த பின்பும் சிங்கள இனவெறிப்படை தாக்கி அழித்தது. ஆயுதம் ஏதுமற்ற தமிழ் மக்களை ஓடஓட விரட்டி சுட்டனர். காயம்பட்டு கிடந்த 20 ஆயிரம் பேரை எவ்வித உதவியும் அளிக்காமல் கனவகை புல்டோசர் எந்திரத்தை ஏற்றிக் கொன்று அப்படியே பெருங்குழிக்குள் புதைத்தார்கள்.

இறந்தோர் இருப்போர் பற்றி எந்த செய்தியும் வெளிஉலகுக்கு தெரியாமல் இருக்க பத்திரிகையாளர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை. தி இந்து பத்திரிக்கைக்கு மட்டும் அனுமதி கிடைத்தது.
இவ்வளவு மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் நிகழ்த்திய இலங்கை மீது விசாரனை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் கூட இந்தியா, சீனா ஆகியநாடுகள் தோற்கச்செய்து சிங்கள பேரினவாதத்திற்கு துணையாக நின்றன.


வெள்ளைக்கொடி பிடித்துப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி கூறிய நடேசன் உள்ளிட்ட முக்கிய புலித்தலைவர்களை
சுட்டுக் கொன்றது இந்த நூற்றாண்டின் பேரவலம். போர் நின்றதாக கூறப்பட்ட பின் இடைத்தங்கல் கூடாரம் என்றும் நல்வாழ்வுச்சிற்றூர் என்றும் வெளியிடப்பட்டிருக்கும் வதை முகாம்களில் உள்ள பெண்கள் கொத்து கொத்தாக சிங்களர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உடல்வலிவுள்ளவர்களாக தோன்றுகிறவர்கள் அனைவருமே அங்கிருந்து கடத்தப்பட்டு படுகொலைக்கு ஆளானார்கள்.


போர்நடக்கும் போதிருந்தே காயமுற்றவர்களையும் நோயுற்றவர்களையும் உயிருடன் பிளந்து அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து கொழும்புக்கு விற்பனைக்காகவும் சிங்களர்க்கு பயன்படுத்தவும் அனுப்பி வருகின்றனர். இப்படி எண்ணிப்பார்க்க முடியாத கொடூரம் அரங்கேறியுள்ளது.


ஈழமக்கள் மீதான போர் நடந்து கொண்டிருந்த போதும் நடந்து முடிந்து விட்ட போதும் தமிழக தலைவர்கள் தமிழக மக்கள் நிலை என்ன?
இலங்கையில் போரை நிறுத்த என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை தமிழக தலைவர்கள் போராடினார்கள். அரசியல் கட்சிகள்,வழக்கறிஞர்கள்,திரைப்படத்துறையினர்,மாணவர்கள், திருநங்கைகள் என்று அனைத்து தரப்பினரும் போராடினார்கள். அக்டோபர் 14 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி 6 தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய நடுவண் அரசுக்கு கொடுத்தார்கள்.


தமிழகம்-புதுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு அக்டோபர் 28 அளவில் பதவி விலகப்போவதாக அச்சுறுத்திப் பார்த்தார்கள். அக்டோபர் 24 அன்று 100 கி.மீக்கும் அதிக நீளமான மனிதச்சங்கிலி நடத்தினார்கள்.
வை.கோ., கண்ணப்பன், தோழர் பெ.மணியரசன்,கொளத்தூர் மணி,திரைப்பட இயக்குநர் சீமான்,பல தமிழுணர்வாளர்கள் என வாயால் பேசிய பேச்சுக்களுக்காகவும் குடிநாயக வழிப்பட்ட போராட்டங்களுக்காகவும் சிறையிலடைக்கபபட்டார்கள். தமிழின உணர்வாளர்கள் முத்துக்குமார் தொடங்கி 14 உணர்வாளர்கள் தீக்குளித்து 'உயிராயுதம்' ஏந்தி ஈழத்தமிழர்களுக்காக போராடினார்கள். 

தமிழகத் தலைவர்கள் தில்லி சென்று சோனியாவிடமும், மன்மோகன் சிங்கிடமும் வேண்டுகோள் வைத்தார்கள். தமிழக சட்டமன்றம் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்கும்படி 2008 ல் மூன்று தீர்மானங்களை தில்லிக்கு அனுப்பி வைத்தது. தமிழக மக்களின் குடிநாயக உரிமைகளின் அடையாளமாக கருதப்படும் தமிழக சட்டமன்றத்தின் மூன்று தீர்மானங்களையும் தில்லி அரசு காலில் போட்டு மிதித்து விட்டது. இன்று எல்லாம் முடிந்து போய்விட்டது.
கடந்த கால நிகழ்வுகளிலிருந்து என்ன தெரிகிறது?


1.தமிழர்களின் வேண்டுகோளை தில்லி எப்போதும் மதிக்காது. தில்லியின் ஆசையை நிறைவேற்றிக் கொடுப்பவர்கள் வேண்டுமானால் ஆட்சி, அதிகாரம் அரசில் பதவிகளை பெறலாம்.

2. படுகொலை செய்யும் சிஙகள அரசைத்தடுத்து நிறுத்தும் சக்தி தமிழகத்துக்கு கிடையாது. தமிழர்கள் மீதான போரை பின்னின்று நடத்தும் இந்திய அரசைத்தடுத்து நிறுத்தும் சக்தியும் தமிழகத்துக்கோ தமிழக அரசுக்கோ கிடையாது. இந்திய கடற்பகுதிக்குள் புகுந்து இதுவரை 450 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கொன்றுள்ளது. இதற்கு இலங்கை அரசிடம் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஒற்றை சொல்லை கூட தமிழக அரசால் பெற முடியாது.இது ஒரு அடிமைப்பட்ட இனம். தமிழக அரசு என்பது இந்திய அரசின் கண்காணி அரசு.

3.ஈழத்தமிழர்கள் ஆனாலும் தமிழக மீனவர்கள் ஆனாலும் அவர்களை காப்பாற்ற என்ன உத்தி மீதமிருக்கிறது? கலைஞர் கண்டுபிடித்த 'கடிதம் எழுதுவது' 'தந்தி அனுப்புவது' உண்ணாவிரதம்' ' மனிதச்சங்கிலி' சட்டமன்றத்தில் 'ஐயகோ தீர்மானம்' என்று சகலவிதமான போராட்டங்களையும் நடத்தி முடித்து விட்ட நிலையில் தான் இந்திய அரசின் ஆதரவுடன் இனப்படுகொலைப் போரை இலங்கை அரசு நடத்தி முடித்தது.ஆக,இவரால் ஆகபோவது ஒன்றும் இல்லை.

4.இந்தியா மீது இன்னமும் நம்பிக்கை வைக்கும்படி கூறுவது தமிழர்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தவித வெட்கமோ குற்ற உணர்வோ இல்லாமல் தமிழக அரசியல் கட்சிகள்  காங்கிரஸ் அரசில் பங்கேற்பது தமிழினத்துக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?

5.இந்திய அரசே பின்னின்று ஈழப்படுகொலையை நடத்திய நிலையில் இந்திய அரசை குற்றவாளியாக அடையாளங்கண்ட தமிழகத் தலைவர்கள் எத்தனை பேர்? ஈழத்தமிழர்களை ஆதரித்துக் கொண்டே இந்திய அரசை விமர்சிக்காமல் அரசியல் பண்ணும் உத்தியின் நோக்கம் என்ன?
6. ஈழ மக்கள் மீதான நீண்ட காலத் தாக்குதலை நிறுத்தச் சக்தியற்ற தமிழகத் தலைவர்கள் அந்த மக்கள் முன்னெடுத்த ஆயுதப்போரை எந்த அளவு கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். இப்போது போரும் நின்று விட்டது. அந்த இனமும் பெருமளவு அழிந்து விட்டது. இதுவரை போராளிகளை அவதூறு செய்த தமிழக அரசியல் வியாதிகளே! ஈழத்தமிழர்களுக்கு என்ன தீர்வை தந்தார்கள்? 

மாவோயிஸ்டுகளிடம் மண்ணை கவ்வும் காங்கிரஸ் ஆட்சி, லக்ஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை எப்படி சமாளிக்க போகிறது. தமிழ்நாட்டுக்கு அரணாக இருந்த விடுதலை புலிகளை ஒடுக்க ராசபக்சேவுடன் கைகோர்த்ததன் விளைவை காங்கிரசும் இந்தியாவையும் இந்த மண்ணை பற்றியும் தெரியாத கத்துக்குட்டி சோனியாவும் அனுபவிக்க தான் போகிறார்கள்.






ஆக...நாம் எந்த நாட்டில் இருக்கிறோம்? நமக்கு யார் பாதுகாப்பு?

Tuesday, September 7, 2010

கலிஞர் டீவிலயே உங்க திருமுகத்த காட்டி வெசயகாந்துக்கு சூடு

ஐயா,உலகத்தமிழர்களுக்கெல்லாம் தலைவரே,கும்புடுறோமுங்க.

நாங்க தான் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்.நீங்க தான் இவ்ளோ நாளா உங்க உடன்பிறப்புகளுக்கெல்லாம் பக்கம் பக்கமா கடிதாசி போடுறத சொல்றீங்க ஆனா எங்க ஊருக்கு தபாலே வர்றது இல்ல. அதுனால, நாங்களும் உங்களுக்கு ரொம்ப நாளா ஒரு கடிதாசி எழுதி போட்டுருவோம்னு நெனச்சு எழுதியும் புட்டோம்.


ஆனா..அந்த கடுதாசிய போடுறதுக்கு தபால் பொட்டிய தேடிப்பாத்தோம்.எங்கேயுமே காணோம். அடங்கொப்புரானே!! அங்கங்க மரத்துல கட்டிவெச்சிருந்துச்சே மத்திய அரசாங்கம் தபால் பொட்டிகள..எங்கட போச்சு அதெல்லாம்னு தேடினா..ஒரு பொட்டிய மரத்துல கட்டிவெச்சுருக்காங்க. இன்னொரு பொட்டிய உச்சா போற எடத்துல கட்டி வெச்சிருக்காங்க. இன்னொரு பெட்டிய ஒரு குப்பத் தொட்டி பக்கத்துல வெச்சிருக்காங்க. நாங்க பயந்தே போயிட்டோம்.


என்னடா இது! இந்திய அரசாங்கம் இலங்கையில இருக்க ராசபக்சேக்கெல்லாம் கோடி கோடியா கொட்டி குடுக்குறாங்க. அரசாங்க சொத்தா இருக்குற இந்த தபால் பொட்டிய வெக்க கூடயா இடம் இல்லாம இருப்பாங்கனு நெனச்சு நாங்க அத தபால் பொட்டினு நம்பவே இல்ல. பல எடத்துல சுத்தி பாத்தோம். எல்ல எடத்துலயும் தபால் பொட்டிங்க இப்படித்தேன் இருந்துச்சு.


அந்த பெட்டி இருக்குற நெலமய பாத்தா நீங்க கூட மறந்து போயி அதுல உங்க கடிதாசிய போடமாட்டீங்க. ஆனாலும் நாங்க அந்த பொட்டிய நம்பி நாங்க வுழுந்து வுழுந்து (நாங்க கரண்ட எல்லாம் பாத்தே ரொம்ப நாளாச்சு தலீவரே) இருட்டுல வெளக்கு புடிச்சுக்கிட்டு எழுதுன தபால அதுல போட்டுட்டு வந்துட்டோம்.  

இதுலயும் ஒரு வெசயத்த பாருங்க!!!எங்களுக்கு எப்பீடி அந்த பொட்டில தபால போடுறதுன்னு நம்பிக்கை வந்துச்சுன்னு நீங்க கேட்டீஙகன்னா ஆச்சரியப்பட்டு மயக்கமே போட்டுறுவிங்க.
நீங்க வழக்கமா ஈழத்தமிழருங்க குத்துயிரும் குலையிருமா துடிக்கிறப்போவும் மன்மோகன் சிங்குக்கு கடிதாசி எழுதி இந்த பொட்டில தான் போடுவிங்க, தமிழநாட்டுல தஞ்சாவூரு விவசாயிங்க வெள்ளாம வெளச்சல் இல்லாம தூக்கு போட்டு தொங்குறதா சேதி வந்தாலும் உடனே ஒரு கடிதாசிய எழுதி எடியூரப்பாவுக்கோ,மன்மோகன்சிங்குக்கோ நிவாரண நிதிகேட்டு இந்த பொட்டிகள்ள தான் போடுவீங்க, முல்ல பெரியாறு அணக்கட்ட கேரளாக்காரேன் ஒடக்க போறானு சேதி வந்தாலும் ஒரு கடிதாசிய எழுதி இந்த பொட்டில தான் போடுவீங்கன்னு அக்கம் பக்கத்துல இருந்த பொதுசனங்க சொன்னாங்க.

இதுக்கு மேல நாங்க நம்பாம இருக்க முடியுமா? அக்கம் பக்கத்துல இருந்த பொதுசனங்க சொல்லும் போது எங்களுக்கும் நம்பிக்கை வந்துருச்சு. நாங்களும் உங்களுக்கு எழுதுன கடிதாசிய அங்க செக்கசெவேல்னு சொறிநாயி மாதிரி தொங்கிட்டிருந்த பீத்த தபால் பொட்டில போட்டுட்டோம்.

தப்பித்தவறி கூட  எங்க கடுதாசி அந்த பொட்டிக்குள்ள தேன் போய் வுழுந்துச்சானு நாங்க கைய உள்ள விடல. ஏன்னா. நீங்க பாளயங்கோட்டையில ஜெயிலுக்குள்ளயே பாம்பு பல்லிங்கல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தீக. அப்படியிருக்கும் போது இந்த பாழா போன தபால் பொட்டி எம்மாத்திரம்.

ஒரு வழிய நாங்க தபால் பொட்டில கடுதாசிய போட்டுட்டு வேகமா நடயக்கட்டிட்டோம். சரி..நாங்க ஏன் இப்பீடி பதிவு போடுறோமுன்னா...எங்களுக்கு அந்த பொட்டில போடுற கடுதாசி உங்களுக்கு வந்திருக்குமோ வந்திருக்காதோன்ற சந்தேகத்துல தான்.
சரி விடுங்க. மன்மோகன் சிங்குக்கு நீங்க எழுதுற கடிதம்லாம் கொஞ்சம் லேட்டா தான் போய் சேருதுனு பேசிக்கிறாக. நீங்க எழுதுற கடிதாசியே லேட்டா போகுதுனா எங்க கடுதாசி எப்பிடியும் அடுத்த பொங்கலுக்கு தான் உங்களுக்கு வரும். அதுனால தான் நாங்க இப்பீடி பதிவுல போட்டுறுலாமுன்ன இங்க வந்தோம்.

சரி வெஷயத்துக்கு வர்றோம். இப்பிடியே கடிதாசியயும், பாழாப்போன மன்மோகன் சிங் தபால் பொட்டியையும் பேசி சொல்ல வந்தத மறந்துற போறோம். ஆமா...நீங்க சாமியெல்லாம் கும்புடுறிங்களாமே! இன்னிக்கு வெசயகாந்து சொல்லிருக்காரு.
உண்மைதானா தலவரே!! அதுலயும் சாமிகும்புட்ற வெசயத்துல மேல்மருத்துவர் பங்காருவ எல்லாம் மிஞசிப்புட்டிங்களமே.கையில எலுமிச்சம் பழத்த எடுத்துக்கிட்டு கிருஷணன் கோயில் இருக்க பக்கமா திரும்பி மனசார அந்த கிருஷ்ணனே உங்க கிட்ட வந்து இறங்கணும்ற மாதிரி தரிசனம் பண்ணுவீங்கன்னு சொல்றாரு.


ஆனாலும் நாங்கல்லாம் இதெல்லாம் நம்பவே மாட்டோம். ஏன்னா..கவரிமானுக்கு முடிபோச்சுன்னா முட்டிக்கிட்டு செத்துப்போகுமாம். நீங்க அப்படிப்பட்ட ஒரு தலவரு. உங்கள போயி இந்த வெசயகாந்து இப்படி சொல்லிப்புடடரேன்னு தான் நாங்க இரண்டு நாள பச்ச தண்ணி கூட குடிக்கல. உங்கட்ட இருந்து முரசொலில வெசயகாந்து சொன்ன இந்த விசயத்துக்கு பதிலடி வர்ற வர நாங்களும் சாப்பிடறது இல்லனு முடிவு பண்ணிட்டோம். இன்னொன்னயும் சொல்லிருக்காரு இந்த வெவரம் புரியாத விசயகாந்து...நீங்க கையில் போட்டுறுக்க பவள மோதிரமும், மேல போட்டுறுக்க மஞ்சத்துண்டும் ராசிக்காக போட்டுறுக்கீங்களாம். இந்த இரண்டயும் கழட்டவே மாட்டிங்களாம்.


'என்ன வீராப்பு பாருங்க' இந்த பார்ட் டைம் அரசியல் வாதிக்கு. இதுக்கு நீங்க பதில் குடுத்தே ஆகணும் தலவரே. இவருக்கு நீங்க தான் அண்ணாவவிட,பெரியார விட,தண்டவாளம் வி.கே அரங்கராச விட,'பெரியார் தொண்டன்' சந்தான கிருட்டிணன விட,'தமிழ்முரசு' கோ.சாரங்கபாணிய விட,'அழியட்டுமே திராவிடம்'நாராயணனவிட,'பேனாநர்த்தனம்' ரெ.திருமலைச்சாமிய விட, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனவிட,அணைக்கரை 'டேப்' தங்கராசுவ விட மிகப்பெரிய சுயமரியாதை சுடரொளினு எங்களுக்கு நிரூபிக்கணும் தலவரே!

அதுக்கு இந்த வெசயகாந்து சொன்ன பவள மோதிரத்தையும் மஞ்ச துண்டயும் கழட்ட முதல்ல தூக்கி எறிஞ்சு நம்மல்லாம் திராவிட போர் முரசுங்கறதயும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஐயா சொன்ன மாதிரி, நம்ம கழகத்துக்கு இது மாதிரி பேசி இழுக்கு வந்தத தொடச்சு எறிஞ்சுட்டு ' தோழா நீ துயர் துடைப்பாய்! வாழ்வில் உயர்வடைவாயே! வாய்விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்" னு இந்த வெசயகாந்துக்கு பதிலடி கொடுங்க தலவரே!!!

நீங்க இப்பலாம் எங்கயும் நடந்து போய் இது போல் பீத்த தபால் பொட்டியலாம் கண்டுபிடிச்சு கடுதாசிலாம் போட வேணாம் தலவரே. நீங்க தான் இப்போஎலவச தொலக்காட்சி பொட்டி குடுத்துருக்கீங்க. நாங்களும் குவார்ட்டர், கட்டிங் வாங்கி போட்டுட்டு தாராளமா உங்க குடும்பம் தவிர மத்தவங்க தயாரிச்ச திருட்டு விசிடிய வாங்கி போட்டு பாத்துட்டு வீட்டுல சாஞ்சு கெடக்குறோம். அதுனால் நீங்க கடிதாசிலாம் எழுதாம உங்க கலிஞர் டீவிலயே உங்க திருமுகத்த காட்டி வெசயகாந்துக்கு சூடு வெச்சிங்கன்னா தான் நாங்க தல நிமிந்து நடக்க முடியும் தலவரே!

இப்படிக்கு,உங்கள் கடுதாசியை விரைவில் எதிர்பார்க்கும்
குப்பணம் பட்டி உடன்பிறப்பு குப்புச்சாமி
(அதாவது சென்னையில் 'பிராமணாள்' என்ற பெயரை ஒரு காப்பிக்கடையில் எழுதியிருந்ததை நீக்க சொல்லி உங்கள் ஊரான திருவாரூரில் பிறந்த ஆ.முத்துக்கிருட்டிணன் உடன் சேர்ந்து முரளீஸ் கபே என்ற கடையின் முன் மறியல் நடத்தி ஜெயிலில் களி தின்று இன்றைக்கு வெட்டியாய் பொழுது ஓட்டும் அதே குப்புச்சாமி தான். உங்கள் குடும்பம் இன்றைக்கு கிளவுட் நைன், ரெட் ஜெயிண்ட் என்று அழகான ஆங்கிலத்தில் பெயர் வைத்திருப்பதை கண்டு புளகாங்கிதமடைகிறேன் என்பதையும் தலீவருக்கு சொல்லி இந்த கடுதாசியை முடிக்கிறேன்.)

Sunday, September 5, 2010

குடிமகன்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

காலை-10 மணிக்கு டாஸ்மாக் நிலவரம்


 டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிது. .
டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் வரும் வருமானம் தமிழக அரசுக்கு மிக முக்கிய வருமானமாக உள்ளது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க
39 வகை புதிய மதுபான வகை தயாரிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(தேர்தல் வருதுல்ல  புது சரக்குலாம் போட்ட தானே அது கவருமெண்டு)


 மாலை 4.50 மணிடாஸ்மாக் நிலவரம் ரொம்ப பிசி குடிமக்கள்!!!
 



Friday, September 3, 2010

பாபாஜிக்கு ரஜினி சீடர் ஆக முடியுமா? நீங்களே முடிவு சொல்லுங்கள்.



ரஜினிஅதிரடி முடிவு-அதிர்ச்சியில் குடும்பம்
தமிழக அரசியல் இதழில் வந்த செய்த
" ரஜினியின் கடைசி படமாக எந்திரன் இருக்குமோ என்று ஐயம் வருகிறது. இந்தப்படத்துக்கு மட்டும் மூவாயிரம் பிரிண்டுகள் எடுக்கப்படுகிறதாம். ரிலீஸ் அன்று ரஜினி சென்னையில் இருப்பாராம். சில தினங்கள் அமெரிக்கா செல்வாராம். அங்கிருந்து திரும்பியதும் இமயமலைக்கு சென்று விடுவாராம். அங்கேயே ஒரு இடத்தை வாங்கி எளிமையான வீட்டையும் கட்டிவிட்டதாக தகவல்.அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார் என்று சொல்கிறார்கள்.

"என்ன காரணம்"?
"அதெல்லாம் தெரியவில்லை. மகள் திருமணம் செப்டம்பர் 3 ம் தேதி. அது ஒன்று தான் ரஜினி முன்னின்று நடத்த வேண்டியது. அது முடிந்ததும் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள். மேலும் முதல் மகளுக்கு என்னென்ன சொத்துக்கள்,மனைவிக்கு இது, இரண்டாவது மகளுக்கு இது என்று பிரித்து விட்டாராம்.
சென்னைக்கு வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவாராம். ரஜினியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-------இது தான் அந்த செய்தி

அதாவது ரஜினி பாபாஜி பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். பாபா தனக்கு காட்சி தந்து தன்னை சீடராக்கி கொள்வார் என்பது ரஜினியின் நம்பிக்கையாக இருக்கலாம். அது நடக்குமா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

லெளகீக வாழ்க்கையில் பற்றுக் கொள்ளும் மனிதர்கள் யாரும் எந்த மகானுக்கும் சீடராக முடியாது என்பது இயற்கையின் நியதி.அதாவது ஆசையை துறந்த மனிதர்கள் தான் இந்த உலகத்தில் கண்ணுக்குள் புலப்படாமல் வாழ்வதாக கூறப்படும் மகான்களுக்கு சீடராக வரமுடியும்.

 

நம்ம ரஜினி....அய்யகோ..சென்னையில் பல கோடி மதிப்பில் சொத்து, கர்நாடாகவிலும் ஐதராபாத்திலும் பண்ணைவீடு தொழிற்சாலைகள் என்று மகாகோடீசுவரர்.

தெளிவாக எப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும்? அந்த சம்பாதியத்தை எப்படியெல்லாம் மனைவி மகள்களுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்கள் செழிப்பாக வளமாக வாழ வேண்டும் என்றெல்லாம் மிகத்துல்லியமாக திட்டம் போட்டு கொடுத்து விட்டு இவர் இமயமலைக்கு செல்வாராம்.

இவரை மகாஅவதார் பாபாவும், அவரது எந்த சுயநலமும் இல்லா சீடர்களும் "உங்களுக்காக தான் ரஜினி காத்திட்டிருந்தோம்" என்று வரவேற்பார்களாம். என்ன கொடுமை இது?

மனது முழுவதும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றியும், அவர்கள் எந்த துன்பமும் படாமல் வாழவேண்டும் என்பதற்காக சொத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு செல்லும் இவரால் இமயமலைக்கு போய் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா? தவம் செய்ய உட்கார்ந்தவுடன் இவரது எண்ணமெல்லாம் எங்கிருக்கும்?

"ஐயோ சொத்தை பிரித்துக் கொடுத்து வந்தோமே..இந்த சவுந்தர்யா ஏதாவது புதுக்கம்பெனி தொடங்குகிறோம் என்ற பெயரில் எதையாவது தொடங்கி கடனை வைத்து விடப்போகிறாளோ? கடன் காரர்கள் வந்து மொய்த்து கோர்ட், கேஸ் என்றாகி விட்டால் என்னவாகும்" என்றல்லவா மனம் நினைக்கும். எப்படி தவம் செய்ய முடியும்?

பாபா யாரை தனக்கு சீடராக விரும்புகிறார். இந்த உலக இன்பங்களை துறந்தவனையும்,லெளகீக வாழ்க்கையில் பற்று வைக்காதவனையும் தான். ஆனால் ரஜினிக்கு தனது சொத்தின் மேல் அளவு கடந்த பிரியம். அதை விட தனது வாரிசுகள் மேல் தீராத பிரியம். இப்படி பட்டவரால் எப்படி பாபாக்க சீடராக முடியும்.

யாரால் பாபாஜிக்கு சிறந்த சீடராக முடியும்? இதோ ஒரு குட்டிக்கதை இங்கே பார்வைக்கு!!!

இந்த கதையை படித்து விட்டு ரஜினிக்கு பாபா சொல்லப் போவது என்ன தெரியுமா?

"டேரா டண்டா உடாவே" இது பாபாஜி தனது சீடர்களுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உரையாடி விட்டு கிளம்பும் போது சொல்லும் வார்த்தை.அதாவது" நாம் கிளம்பலாம்" என்று பொருள். ஆனால் அந்த கூட்டத்தில் ரஜினி சேர்க்கப்பட மாட்டார்.

நித்யானந்தா ஒரு புத்தகம் படித்து தான் இவ்ளோ பக்தர்களை ஏமாற்ற முடிந்ததாக சொல்கிறார்கள்.அது பாபாஜியின் சீடரான யோகானந்த பரமகம்சர் எழுதியது. ஒரு யோகியின் சுய சரிதம் என்ற அந்த நூலில் இருந்து ஒரு குட்டி கதை....ரஜினிக்காக!!!



தலைவா.....எந்த குகைக்கு நீங்க போனாலும் உங்களுக்கு புண்ணியம் இல்லை.போஸ்லாம் வேணாம்
ரு சமயம் பாபாஜி நீடித்துயர்ந்த மலையில் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய புனிதமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வளவு உயரமான மலையை ஒரு மனிதன் மிகவும் சிரமத்துக்கு இடையே கடந்து அடைந்து விட்டான். அந்த மனிதன் ஒரு பாறையின் விளிம்பில் வந்து நின்றான்.

'ஐயா தாங்கள் தான் பாபாஜியாக இருக்க வேண்டும்'. அந்த மனிதனின் முகம் விண்டுரைைக்க முடியாத அளவு ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக்கணக்கில் இடைவிடாமல் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். தயை செய்து என்னை தங்கள் சீடனாக்கி கொள்ள மன்றாடுகிறேன்."மகாகுரு பாபாஜீ பதில் எதுவும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே உள்ள பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவை சுட்டிக்காட்டினான். 'நீங்கள் என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டுதலை நான் பெறாவிடில் இனி வாழ்நது பயனில்லை.'
" அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் உன்னை நான் ஏற்றுக் கொள்ள முடியாது" பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.
"அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத்தான பாறையை தாண்டி மலையிலிருந்து குதிதூது விட்டான். அதிர்ச்சியுற்ற பாபாஜி தனது சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலை உடனே கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார்.
சீடர்களும் உருக்குலைந்து போன அந்த மனிதனின் உடலைக் கொண்டு வந்து பாபாஜயின் முன் கிடத்தினார்கள். குருதேவர் பாபாஜி தனது கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார்.ஆ!!அவன் தன் கண்களை திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.
" நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்" உயிர்க்கப்பிட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார்."நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய்.மரணம் உனனை மறுபடியும் தீண்டாது.

அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்" பிறகு அவர் வழக்கமாக குறிப்பிடும் வார்த்தைகளை கூறினார். 'டேரா டண்டா உடாவோ' அக்குழு முழுவதும் அம்மலையிருந்து மறைந்து விட்டது.
கதை புரிந்ததா திரு ரஜினிகாந்த் ஆகிய சிவாஜிராவ் அவர்களே!
ஆக.......
உங்களால் பாபாஜிக்கு சீடராகவே முடியாது

காரணம் 1.நீங்கள் லெளகீக குடும்ப வாழ்க்ைக்கு அடிமையான ஒரு மனிதர்.பகட்டுக்கும் ஆடம்பரத்துக்கும் அடிமை. உங்களை போன்றவர்களால் பாபாஜியை காணவே இந்த பிறவியிலும் எந்த பிறவியிலும் முடியாது.

காரணம் 2. ஒரு சகமனிதனை ஏமாற்றினலே அவனை நரகத்தில் எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பார்களாம்.நீங்கள் பல கோடி இளைஞர்களை முட்டாள்களாக மாற்றி அறியாமையில் உழண்டு உங்கள் பின்னால் வந்த அவர்களுக்கு எந்த வாய்சும் கொடுக்கவில்லை. வாய்ப்பும் கொடுக்கவில்லை. ஆக உங்களுக்கு எண்ணெய் கொப்பரையா?குளமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
காரணம்......நீஙகள் பாபாஜி குகைக்கு போனதை கூட ஒரு தொலைக்காட்சி உங்கள் கு....பின்னாலேயே வந்து ஒளிபரப்பி தாராளமாக காசு பார்த்ததுடன் உங்களுக்கும் பெரிய ஞானி பட்டத்தை சூட்ட முனைந்தது.

இந்த "டிகால்டி" வேலைகள் பார்க்கும் நபர்களை எல்லாம் பாபாஜி சீடனாகவே ஏற்றுக் கொள்ளவே மாட்டார். பாறையிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குதித்தானே பாதாளத்தில் அவனை போன்றவர்கள் தான் பாபாஜிக்கு பிடித்தமானவர்கள்.ஆக..
ரஜினி அவர்களே...நீஙகள் எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டு இமயமலைக்கு போனாலும் உங்களால் பாபாஜியையோ அவரின் கால்கோடி சீடரைக்கூடி காணமுடியாது.உணரவும் முடியாது என்பதை விளக்கவே இந்த கதை.

பாபாஜி குழுவில் உங்களுக்கு இடம் இல்லை.
நீங்கள் இனி இமய மலைக்குக் எல்லாம் போய் புண்ணியம் இல்லை..இல்லவே இல்லை"டேரா டண்டா உடாவே"
இப்படிக்கு
பாபாவின் உண்மையான சீடனாக துடிக்கும் மனிதன்

Thursday, September 2, 2010

ரஜினி உங்களை அந்த பாபாஜி கூட மன்னிக்க மாட்டார்-ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம்


உங்கள் மனசாட்சியை திறந்து வைத்து இதை படிங்க ரஜினி(சிவாஜிராவ்)ராவ் அவர்களே!!


"என் மகள் சவுந்தர்யாவுக்கு சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. உங்களை அழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்
இட நெருக்கடியாலும்,போக்குவரத்து நெருக்கடியாலும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான உங்களை அழைக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மணமக்களுக்கு உங்கள் நல்லாசிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
----நடிகர் ரஜினிகாந்த்


எங்கோ பிறந்து கர்நாடகா மாநிலததின் போக்குவரத்து கழகத்தில் ஓடிய ஒரு பஸ்ஸில் சாதாரண கண்டக்டராக வேலை பார்த்தவர் நீங்கள். தமிழ்நாட்டிற்குள் வந்து பாலசந்தரின் படங்களில் நுழைந்த உங்களை தமிழக மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
பதினாறு வயதினிலே பரட்டையாகவே மாறிய நீங்கள் அந்த ரோல் எதிர்மறையான கதபாத்திரமாக இருந்தாலும் மக்களின் மனதில் பதிந்து போனீர்கள். உங்களின் நடை உடை பாவனைக்கு மாற எத்தனையோ பேர் முயற்சி செய்தும் தோற்றுப் போனது தான் மிச்சம். சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் கவ்வி பிடிக்கும் அந்த ஸ்டைல் எந்த வித்தைக்காரருக்கும் வராத ஒன்று.
உங்களை பாலசந்தர் பார்த்து சினிமாவில் நுழைத்ததற்கு இந்த சிகரெட் வித்தையும் கூட ஒரு காரணம். இவ்வளவுக்கும் உங்களுக்கு சரியாக நடனம் வராது என்பதை நீங்களே பல நேரங்களில் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். கமலஹாசனின் ஆட்டத்தையும், அவர் போடும் பல வேடங்களையும் கண்டு எனக்கு பிரமிப்பாக இருக்கிறது என்பதையும் நீங்களே வாய் விட்டு சொல்லியிருக்கிறீர்கள்.காரணம் உங்களுக்கு பெரிதாக நடனம் ஆடவோ அழுது புலம்பி சோகத்தை காட்டவெல்லாம முடியாது.
அடிதடி, அதைவிட்டால் பறந்து பறந்து சண்டை. நீங்கள் காலை தூக்கி சுழற்றினாலே 100 அடி தூரத்தில் இருக்கும் வில்லன்கள் மேலும் பறந்து போய் அதற்கடுத்து நூறு அடி தூரத்தில் விழுவார்கள். இப்படி மந்திரவாதி வித்தையெல்லாம் கூட நிஜமென்று நம்பி ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து உங்கள் படத்தை ஓடவைத்தார்கள்.


ஆனால் உங்களுக்கும் நடிக்க வரும் என்பதை மேலே சொன்ன பதினாறு வயதினிலே பரட்டை,ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் காட்டினீர்கள்.ஆனாலும் இந்த நடிப்பை எல்லாம் மூட்டை காட்டி வைத்து விட்டு, காலத்திற்ப மாறி குழந்தைகளை ராஜா சின்ன ரோஜா என்று கவர்ந்தீர்கள். குழந்தைகளுடன் ஆடிப்பாடி தமிழ்நாட்டு பால் குடிக்கும் பாப்பா முதல் பொக்கை வாய் கிழவி வரை உங்களுக்கு ரசிகர்களாக ஆனார்கள்.
தொடர்ந்து எப்போதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் உங்கள் ரசிகர்களுக்கு தீனிபோட பாட்சா போன்ற படங்களில் பல பயிலவான்களை தனியாக அடித்து நொறுக்கினீர்கள். நீங்கள் நடித்தாலே தியேட்டர்களில் படங்கள் சக்கை போடுபோட்டன என்றாலும் உங்கள் ஆசையை தணிக்க எடுத்துக் கொண்ட ராகவேந்திரா,அதிசய பிறவி,வள்ளி உள்பட படங்கள் எல்லாம் கல்லா கட்டாமல் டப்பாக்களில் சுருண்டு கொண்டன.


இருந்தாலும் தாணைத்தலைவன் படத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக இந்த படங்களை நூறு முறை பார்த்த ரசிகர்கள் எல்லாம் உண்டு. உங்கள் படம் தியேட்டருக்கு வரும் நாள் அன்று உங்கள் போஸ்டருக்கு மாலை போட்டு அன்னதானம் செய்தது மட்டுமல்லாமல் நூறு நாள் ஓடினால மொட்டை போட்டுக் கொள்கிறேன் என்று அம்மா அப்பாவுக்கு இழவுக்கு கூட போடாத மொட்டையை உஙகள் படம் ஓடியதற்காக போட்ட வெறி பிடித்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தம். கத்திரிக்காய் விலையோ கருவாட்டு விலையோ உங்களை பாதிக்காவிட்டாலும் கூட ஜெயலலிதா ஆட்சியை மாற்ற வாய்ஸ் கொடுத்தது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடி போட்டீர்கள்.
ஆனால் இன்றைக்கு அரிசி கிலோ 40 ருபாய் விற்கும் போதும், பெட்ரோல் விலை எப்போது மாறும் என்று தெரியாத நிலையிலும் உங்கள் வாய்ஸ் எங்கே போனது என்றே தெரியவில்லை. காரணம், வியர்த்து வடியாத திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த அரசு வீடு கட்டி தருவதால் தான்.
இன்றைக்கு கலைஞரின் குடும்பம் எடுக்கும் படங்கள் ஓட தியேட்டர் கிடைக்காத நிலையில் சாதாரண தயாரிப்பாளர்கள் அல்லாடும் நிலையில் அவர்களுக்காக உங்கள் வாய்ஸ் எங்கே போனது என்பதை கேட்க ஆளில்லை.
காரணம் இதையெல்லாம் கேட்டால் முடி எல்லாம் போய் மொட்டை தலையாக நீஙகள் நடிக்கும் படத்தை ஓட்ட தியேட்டர் கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
இந்த காரணத்தால் மேடையில் புகழக்கூடாது என்று தோன்றினாலும வேறு வழியில்லாமல் துதிபாடி அடிவருடியாக ஆகி போனீர்களே. எல்லாம் நீஙகள் வசனம் பேசுவது போல இந்த ஒரு சாண் வயிற்றுக்கு தானா?
உங்கள் படத்தில் நீங்கள் நல்லவராக வருவது போல் இருக்கும் கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு அரசியலுக்கு நீங்கள் வந்தால் தமிழ்நாட்டையும் அப்படியே ஆண்டு சொர்க்கமாக மாற்றிவிடுவீர்கள் என்று நினைத்து உங்களுக்கு கட்சி தொடங்க ஆர்வமில்லாவிட்டால் கூட உங்கள் ரசிகர்களே ஒரு கொடியையும் வடிவமைத்து கட்சியை தொடங்கினார்கள்.
ஆனால் அவர்களை உடனே ரசிகர் மன்றத்திலிருந்து கட்டம் கட்டிவிட்டீர்கள். இந்த விவகாரம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக ஆக்டிவாக இருந்த சிலருக்கு சென்னையின் புறநகர் பகுதியில் காலி மனை கொடுத்து வாயை அடைத்து விட்டீர்கள்.


பலன் யாருக்கு?எல்லாத்துக்கும் மொட்டை!!!!!!!!!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நடிப்பின் உச்சக்கட்டம் என்பது இப்போது உங்கள் ரசிகர்களை உங்கள் மகள் திருமணத்திற்கு அழைக்க ஆசை இருந்தாலும் இடநெருக்கடியாலும்,போக்குவரத்து நெருக்கடியாலும் இருந்த இடத்தில் இருந்தே ஆசி வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே இது தான் நடிப்பின் உச்சக்கட்டம்.
அது என்ன உங்களை வாழ வைக்கும் தெய்வம்? அந்த தெய்வங்கள் உங்கள் மகளின் திருமண மண்டபத்திற்கு வரக்கூடாதா? எது எப்படி இருந்தாலும் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் தான் முதலில் வந்திருந்து என் மகளை வாழ்த்த வேண்டும் என்று அவர்களை அழைக்காதது ஏன்?


உங்கள் திருமணத்திற்கு நீஙகள் நேரடியாக சென்று அழைப்பிதழ் கொடுத்தவர்களில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். மொள்ளமாரி,முடிச்சவிக்கி,மக்களின் வரிப்பணத்தை திருடி சொகுசுக்காரில் பவனி வருபவர்கள், மாமாக்காரர்கள், களவாணிகள், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்,சாதியை சொல்லி ஊரை ரெண்டாக்குபவர்கள் என்று அந்த பட்டியல் நீளூம். நீங்கள் யார் யாருக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க வேண்டும ஒரு பட்டியல் போட்டிருப்பீர்கள். அந்த பட்டியலை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.


அந்த பட்டியலில் இருக்கும் நபர்களில் சிலரின் பின்னணியை சற்று அலசுங்கள். இப்போது மேலே சொன்ன மொள்ளமாரி, முடிச்சவிக்கி பட்டியலில் யார்யாரை சேர்க்கலாம் என்று நினைத்து பாருங்கள். ஏறக்குறைய நீங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க தயார் செய்த அதே பட்டியலில் அதிகம் பேரின் பேர் இருக்கும்.
அதென்ன...உங்கள் ரசிகர்கள் வரக்கூடாததற்கு இடநெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டியிருக்கிறீர்கள்.நீங்கள் நடித்த புதிய படம் வந்தால் மட்டும் எத்தனை பேருக்கு மண்டை உடைந்தாலும் சினிமா தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் கல்யாணத்துக்கு மட்டும் என்ன புதுக்கணக்கு?
எனவே இனியாவது உங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதை, குறிப்பாக தமிழர்களை ஏமாற்றுவதை நிறுத்துஙகள்.

இப்படியே போனால் நீங்கள் வணங்கும் ராகவேந்திரரும், அந்த பாபாவும் உங்கள் மகளின் திருமணம் நடக்கும் மண்டபத்து பக்கம் கூட வரமாட்டார்கள்.காரணம்,ஏதுமறியாத அப்பாவி ரசிகர்களை இட நெருக்கடி,போக்குவரத்து நெருக்கடியை காரணம் சொல்லி ஏமாற்றி விட்டு மெ, மு,ககளை அழைத்திருக்கும் உங்களையும், உங்கள் விருந்தாளிகளையும் காண அவர்கள் நினைக்க மாட்டார்கள்.


இப்படிக்கு
உங்கள் மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு வரதுடித்து வழக்கமாக ஏமாந்து போன உங்களின் முட்டாள்தமிழ் ரசிகன்.



Wednesday, September 1, 2010

பரம ஏழை கலைஞர் கருணாநிதி




(மதுரை அருகில் மிக பிரமாண்டமாக அழகிரி மகன் தயாநிதி பெயரில் காட்டப்படும் இன்ஜினியரிங் கல்லூரி)


" 18 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்ட கட்டடம் கட்ட முடிகிறது என்றால் அது கோயங்கா குடும்பத்தால் மட்டுமே முடியும் "------- சென்னையில் தினமணி குழுமம் கட்டிய வணிக வளாகம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி.


அப்படி போடுங்க.


அழகிரி அண்ணேன் மதுரைல தென்இந்தியாலயே பெரிய இன்ஜினியரிங் கல்லூரி காட்டுறார்.

தி.மு.க. மந்திரிகள் எல்லோரும் பல எக்கர் நிலத்துல இன்ஜினியரிங் காலேஜ் வெச்சு பொழைக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கறதும், உங்க கட்சி வட்டம்,மாவட்டம்லாம்தமிழ்நாட்டுல இருக்க நெலத்த எல்லாம் வளைச்சு போட்டதா பேசிக்கிறாங்க.


உங்க சிஷ்ய கோடிகளே இப்பிடி.
நீங்க பாவம்.பரம ஏழை. நீங்கள் இது மாதிரி எல்லாம் கட்ட முடியாது. விட்ருங்க.

ஆமா....அழகிரி அண்ணேன் எந்த ஊருல வெவசாயம் பாத்து சம்பாதிச்சாரு?
 

Blogger

இங்கு வரும் செய்திகளுக்கு யாரும் பொறுப்பு அல்ல.