Pages

Thursday, September 2, 2010

ரஜினி உங்களை அந்த பாபாஜி கூட மன்னிக்க மாட்டார்-ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம்


உங்கள் மனசாட்சியை திறந்து வைத்து இதை படிங்க ரஜினி(சிவாஜிராவ்)ராவ் அவர்களே!!


"என் மகள் சவுந்தர்யாவுக்கு சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. உங்களை அழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்
இட நெருக்கடியாலும்,போக்குவரத்து நெருக்கடியாலும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான உங்களை அழைக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மணமக்களுக்கு உங்கள் நல்லாசிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
----நடிகர் ரஜினிகாந்த்


எங்கோ பிறந்து கர்நாடகா மாநிலததின் போக்குவரத்து கழகத்தில் ஓடிய ஒரு பஸ்ஸில் சாதாரண கண்டக்டராக வேலை பார்த்தவர் நீங்கள். தமிழ்நாட்டிற்குள் வந்து பாலசந்தரின் படங்களில் நுழைந்த உங்களை தமிழக மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
பதினாறு வயதினிலே பரட்டையாகவே மாறிய நீங்கள் அந்த ரோல் எதிர்மறையான கதபாத்திரமாக இருந்தாலும் மக்களின் மனதில் பதிந்து போனீர்கள். உங்களின் நடை உடை பாவனைக்கு மாற எத்தனையோ பேர் முயற்சி செய்தும் தோற்றுப் போனது தான் மிச்சம். சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் கவ்வி பிடிக்கும் அந்த ஸ்டைல் எந்த வித்தைக்காரருக்கும் வராத ஒன்று.
உங்களை பாலசந்தர் பார்த்து சினிமாவில் நுழைத்ததற்கு இந்த சிகரெட் வித்தையும் கூட ஒரு காரணம். இவ்வளவுக்கும் உங்களுக்கு சரியாக நடனம் வராது என்பதை நீங்களே பல நேரங்களில் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். கமலஹாசனின் ஆட்டத்தையும், அவர் போடும் பல வேடங்களையும் கண்டு எனக்கு பிரமிப்பாக இருக்கிறது என்பதையும் நீங்களே வாய் விட்டு சொல்லியிருக்கிறீர்கள்.காரணம் உங்களுக்கு பெரிதாக நடனம் ஆடவோ அழுது புலம்பி சோகத்தை காட்டவெல்லாம முடியாது.
அடிதடி, அதைவிட்டால் பறந்து பறந்து சண்டை. நீங்கள் காலை தூக்கி சுழற்றினாலே 100 அடி தூரத்தில் இருக்கும் வில்லன்கள் மேலும் பறந்து போய் அதற்கடுத்து நூறு அடி தூரத்தில் விழுவார்கள். இப்படி மந்திரவாதி வித்தையெல்லாம் கூட நிஜமென்று நம்பி ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து உங்கள் படத்தை ஓடவைத்தார்கள்.


ஆனால் உங்களுக்கும் நடிக்க வரும் என்பதை மேலே சொன்ன பதினாறு வயதினிலே பரட்டை,ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் காட்டினீர்கள்.ஆனாலும் இந்த நடிப்பை எல்லாம் மூட்டை காட்டி வைத்து விட்டு, காலத்திற்ப மாறி குழந்தைகளை ராஜா சின்ன ரோஜா என்று கவர்ந்தீர்கள். குழந்தைகளுடன் ஆடிப்பாடி தமிழ்நாட்டு பால் குடிக்கும் பாப்பா முதல் பொக்கை வாய் கிழவி வரை உங்களுக்கு ரசிகர்களாக ஆனார்கள்.
தொடர்ந்து எப்போதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் உங்கள் ரசிகர்களுக்கு தீனிபோட பாட்சா போன்ற படங்களில் பல பயிலவான்களை தனியாக அடித்து நொறுக்கினீர்கள். நீங்கள் நடித்தாலே தியேட்டர்களில் படங்கள் சக்கை போடுபோட்டன என்றாலும் உங்கள் ஆசையை தணிக்க எடுத்துக் கொண்ட ராகவேந்திரா,அதிசய பிறவி,வள்ளி உள்பட படங்கள் எல்லாம் கல்லா கட்டாமல் டப்பாக்களில் சுருண்டு கொண்டன.


இருந்தாலும் தாணைத்தலைவன் படத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக இந்த படங்களை நூறு முறை பார்த்த ரசிகர்கள் எல்லாம் உண்டு. உங்கள் படம் தியேட்டருக்கு வரும் நாள் அன்று உங்கள் போஸ்டருக்கு மாலை போட்டு அன்னதானம் செய்தது மட்டுமல்லாமல் நூறு நாள் ஓடினால மொட்டை போட்டுக் கொள்கிறேன் என்று அம்மா அப்பாவுக்கு இழவுக்கு கூட போடாத மொட்டையை உஙகள் படம் ஓடியதற்காக போட்ட வெறி பிடித்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தம். கத்திரிக்காய் விலையோ கருவாட்டு விலையோ உங்களை பாதிக்காவிட்டாலும் கூட ஜெயலலிதா ஆட்சியை மாற்ற வாய்ஸ் கொடுத்தது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடி போட்டீர்கள்.
ஆனால் இன்றைக்கு அரிசி கிலோ 40 ருபாய் விற்கும் போதும், பெட்ரோல் விலை எப்போது மாறும் என்று தெரியாத நிலையிலும் உங்கள் வாய்ஸ் எங்கே போனது என்றே தெரியவில்லை. காரணம், வியர்த்து வடியாத திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த அரசு வீடு கட்டி தருவதால் தான்.
இன்றைக்கு கலைஞரின் குடும்பம் எடுக்கும் படங்கள் ஓட தியேட்டர் கிடைக்காத நிலையில் சாதாரண தயாரிப்பாளர்கள் அல்லாடும் நிலையில் அவர்களுக்காக உங்கள் வாய்ஸ் எங்கே போனது என்பதை கேட்க ஆளில்லை.
காரணம் இதையெல்லாம் கேட்டால் முடி எல்லாம் போய் மொட்டை தலையாக நீஙகள் நடிக்கும் படத்தை ஓட்ட தியேட்டர் கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
இந்த காரணத்தால் மேடையில் புகழக்கூடாது என்று தோன்றினாலும வேறு வழியில்லாமல் துதிபாடி அடிவருடியாக ஆகி போனீர்களே. எல்லாம் நீஙகள் வசனம் பேசுவது போல இந்த ஒரு சாண் வயிற்றுக்கு தானா?
உங்கள் படத்தில் நீங்கள் நல்லவராக வருவது போல் இருக்கும் கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு அரசியலுக்கு நீங்கள் வந்தால் தமிழ்நாட்டையும் அப்படியே ஆண்டு சொர்க்கமாக மாற்றிவிடுவீர்கள் என்று நினைத்து உங்களுக்கு கட்சி தொடங்க ஆர்வமில்லாவிட்டால் கூட உங்கள் ரசிகர்களே ஒரு கொடியையும் வடிவமைத்து கட்சியை தொடங்கினார்கள்.
ஆனால் அவர்களை உடனே ரசிகர் மன்றத்திலிருந்து கட்டம் கட்டிவிட்டீர்கள். இந்த விவகாரம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக ஆக்டிவாக இருந்த சிலருக்கு சென்னையின் புறநகர் பகுதியில் காலி மனை கொடுத்து வாயை அடைத்து விட்டீர்கள்.


பலன் யாருக்கு?எல்லாத்துக்கும் மொட்டை!!!!!!!!!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நடிப்பின் உச்சக்கட்டம் என்பது இப்போது உங்கள் ரசிகர்களை உங்கள் மகள் திருமணத்திற்கு அழைக்க ஆசை இருந்தாலும் இடநெருக்கடியாலும்,போக்குவரத்து நெருக்கடியாலும் இருந்த இடத்தில் இருந்தே ஆசி வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே இது தான் நடிப்பின் உச்சக்கட்டம்.
அது என்ன உங்களை வாழ வைக்கும் தெய்வம்? அந்த தெய்வங்கள் உங்கள் மகளின் திருமண மண்டபத்திற்கு வரக்கூடாதா? எது எப்படி இருந்தாலும் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் தான் முதலில் வந்திருந்து என் மகளை வாழ்த்த வேண்டும் என்று அவர்களை அழைக்காதது ஏன்?


உங்கள் திருமணத்திற்கு நீஙகள் நேரடியாக சென்று அழைப்பிதழ் கொடுத்தவர்களில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். மொள்ளமாரி,முடிச்சவிக்கி,மக்களின் வரிப்பணத்தை திருடி சொகுசுக்காரில் பவனி வருபவர்கள், மாமாக்காரர்கள், களவாணிகள், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்,சாதியை சொல்லி ஊரை ரெண்டாக்குபவர்கள் என்று அந்த பட்டியல் நீளூம். நீங்கள் யார் யாருக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க வேண்டும ஒரு பட்டியல் போட்டிருப்பீர்கள். அந்த பட்டியலை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.


அந்த பட்டியலில் இருக்கும் நபர்களில் சிலரின் பின்னணியை சற்று அலசுங்கள். இப்போது மேலே சொன்ன மொள்ளமாரி, முடிச்சவிக்கி பட்டியலில் யார்யாரை சேர்க்கலாம் என்று நினைத்து பாருங்கள். ஏறக்குறைய நீங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க தயார் செய்த அதே பட்டியலில் அதிகம் பேரின் பேர் இருக்கும்.
அதென்ன...உங்கள் ரசிகர்கள் வரக்கூடாததற்கு இடநெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டியிருக்கிறீர்கள்.நீங்கள் நடித்த புதிய படம் வந்தால் மட்டும் எத்தனை பேருக்கு மண்டை உடைந்தாலும் சினிமா தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் கல்யாணத்துக்கு மட்டும் என்ன புதுக்கணக்கு?
எனவே இனியாவது உங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதை, குறிப்பாக தமிழர்களை ஏமாற்றுவதை நிறுத்துஙகள்.

இப்படியே போனால் நீங்கள் வணங்கும் ராகவேந்திரரும், அந்த பாபாவும் உங்கள் மகளின் திருமணம் நடக்கும் மண்டபத்து பக்கம் கூட வரமாட்டார்கள்.காரணம்,ஏதுமறியாத அப்பாவி ரசிகர்களை இட நெருக்கடி,போக்குவரத்து நெருக்கடியை காரணம் சொல்லி ஏமாற்றி விட்டு மெ, மு,ககளை அழைத்திருக்கும் உங்களையும், உங்கள் விருந்தாளிகளையும் காண அவர்கள் நினைக்க மாட்டார்கள்.


இப்படிக்கு
உங்கள் மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு வரதுடித்து வழக்கமாக ஏமாந்து போன உங்களின் முட்டாள்தமிழ் ரசிகன்.



10 கருத்துரைகள்:

Anonymous said...

Neengal Unmaiyileye Rajini Rasikara irunthirunthal Intha Padivai Eluthi Irukka Matteerkal, Rajinai pattri matravarkal ninaippathai polave neenkalum ninaikkireerkal, yeppadiyo unkalukkum hits nichayam, valthukkal.

bala said...

உங்க கருத்து தவறான கருத்து. தமிழ்நாட்டில் உள்ள அவர் ரசிகர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடினால் அங்கே எப்படி சமாளிப்பது? மேலும் பொதுமக்களுக்கும் இடையூராக அமையும். சில விசயங்களை நீங்களே யோசித்து பாருங்கள்.

Anonymous said...

intha mathiri pinneettam podaravanga irukkira varaikkum antha uchchathila than iruppaaru

subra said...

உண்மையை ஏத்துக்க மனமில்லாதவர்கள் ,பாதிக்கபடுபவர்களே
இதை எத்றுக்கொள்ள மாறுகிறார்கள் என்ன கொடுமை
அய்யா.

Anonymous said...

எல்லா ரசிகர்களையும் அழைக்க வேண்டும் என்று இல்லை விருப்பம் இருந்தால் ஒரு மாவட்டத்தில் இருந்து ரசிகர் மன்றம் மூலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் அழைத்திருக்கலாம்.என்னை வாழ வைக்கும் ரசிகர்கள் என கூறுவதெல்லாம் சுத்தப் பொய் நண்பரே.படம் ஓட வேண்டும் என்பதற்காக கூறுபவை.

thatswhyiamhere said...

உங்க கருத்து தவறான கருத்து. தமிழ்நாட்டில் உள்ள அவர் ரசிகர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடினால் அங்கே எப்படி சமாளிப்பது? மேலும் பொதுமக்களுக்கும் இடையூராக அமையும். சில விசயங்களை நீங்களே யோசித்து பாருங்கள்.

sasibanuu said...

Don't waste your time.

Take care your family ...

Pulaikira.. Valiyaparu..

Anonymous said...

Dear Friend,

You have rightly analysed many things. First of all, Hats off to ur news. You boldly pointed rajini's mistake. We have to stop hero worship. They are actors both in films and real life. We have to create this awareness among the innocent public.
Thanks.
Sheik Mujibur Rahman

RaveePandian said...

Please go and do your work. Rajini is not ur MD. Loosaapa nee

Anonymous said...

neenga solvadhayi yosikka thonudhu but Rajini sir mela irukira crazela yethukka mudiyala anyway thanks for certain points

 

Blogger

இங்கு வரும் செய்திகளுக்கு யாரும் பொறுப்பு அல்ல.