

சென்னை, ஆக. 30: சில மாநிலங்களில் உள்ளதைப்போல தமிழகத்திலும் மாவோயிஸ்ட் தாக்குதல், வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்ட்டுகள் (தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் தைரியம் கம்மின்னு சொல்வாங்கலே) திட்டமிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள்.
1938-ல் (ஆஹா...கொஞ்சம் லேட்டஸ்ட் ஆ திங்க் பண்ணுங்க.வருஷம் ரொம்ப பழசு) இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சென்னை தொண்டை மண்டல உயர் நிலைப் பள்ளி வாயிலில் அமைதியான முறையில் மறியல் செய்து கைதானர்களே தவிர, முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவில்லை.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் (இந்த சனநாயகதுள்ள நாங்களும் நாலு படத்துக்கு கதை எழுதி புள்ள குட்டிய எல்லாம் கோடீஸ்வரர் ஆக்குவோம் ன்னு நம்பிக்கை இருக்கு) ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
நமது ??? கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள்; பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள்; அதற்கடுத்து மறியல் என்பார்கள்; அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்.
ஒரு அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அணிவகுத்து வரும் அவர்களின் படைக்கு முரசு கொட்டி வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்படித்தான் கம்யூனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கை பேரணிகளாக "கோட்டை முற்றுகை' என்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.
அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு (மேல போட்டோ பாருங்க) எரிகிற காட்சியைப் பார்க்கிறோம்.
தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறை சேட்டைகளை, கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட( திட்டமிட்டு ரூம் போட்டு பிளான் பன்றாங்கலோ) வருகிறார்கள்.
திமுகவுக்கு ஒரு சிறு களங்கத்தையாவது ஏற்படுத்தினால்தான்
(த.கிருஷ்ணன்ன மாவோயிஸ்டு தான் கொன்னு திமுகவுக்கு களங்கம் வர வெச்சுட்டு ஓடி போயிட்டாங்க போல?)
அதனை வைத்துக் கொண்டு தேர்தலில் நிற்கவோ அல்லது தங்களது கூட்டணித் தலைவி வெற்றி வாகை சூட முடியும் என்ற எதிர்பார்ப்போடு திட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.
பொது ஜனம் -அமைதியான போராட்டம்ன என்னங்க ஐயா?